சினிமா பாணியில்.. கணவனை கட்டிப் போட்டு கடுமையாகத் தாக்கி, கணவன் கண் முன்னாடியே மனைவியை 4 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக வெளியான செய்திகளுக்கு வலுவூட்டுகிறது இந்த பாலியல் பலாத்கார சம்பவம்.

ஆந்திர மாநிலம் ஜாமின் நகர் தாண்டா என்னும் மலைவாழ் பகுதியில் தான், இப்படி ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஜாமின் நகர் தாண்டா என்கிற மலைவாழ் பகுதியைச் சேர்ந்த நாகேஷ் நாயக், தனது மனைவியுடன், அந்த பகுதியில் உள்ள பங்களா ஒன்றில் குடும்பத்துடன் தங்கி செக்யூரிட்டி வேலை செய்து வருகிறார்கள். 

அந்த பங்களாவில் நாகேஷ் நாயக், எப்போதும் இரவு பணி பார்ப்பது தான் வழக்கம். எப்போதும் போல, கணவன் - மனைவி இருவரும் நேற்று இரவு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் 2 இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று வந்துள்ளது.

அந்த 4 பேரும் அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்து, அங்கு காவலுக்கு நின்ற நாகேஷை கடுமையாகத் தாக்கி உள்ளனர். அதன் பிறகு நாகேஷின் கைகளைக்
கட்டிப் போட்டு விட்டு, அவரை மீண்டும் சராமாரியாக தாக்கி உள்ளார். 

அதன் தொடர்ச்சியாக நாகேஷ் கண் முன்னே அவரது மனைவியை அந்த 4 பேரும் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அப்போது, நாகேஷின் மனைவி கதறி அழுதுள்ளார். “என்னை விட்டு விடுங்கள்” என்று அவர் கெஞ்சியும், கதறியும் அழுதுள்ளார். ஆனால், அந்த பெண்ணின் உணர்வுகளைத் துளியும் மதிக்காமல், 4 பேரும் சேர்ந்து கணவன் கண் முன்னே நாசம் செய்துள்ளனர். அப்போது, நாகேஷின் கைகள் கட்டப்பட்டிருந்ததால், அவரால் மனைவிக்கு நேரும் பாலியல் வன்கொடுமையைத் தடுக்க முடியவில்லை.

4 பேரும் மாறி மாறி அந்த பெண்ணை, கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த பிறகு, இறுதியில் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது. 

இதனையடுத்து, கடுமையாகப் பாதிக்கப்பட்ட அவரின் மனைவி, எழ முடியாமல் எழுந்து, கணவரின் கட்டுக்களை அவிழ்ந்து கதறி அழுதுள்ளார். படுகாயம் அடைந்த நாகேசும், “என்னால் ஒன்றும் செய் முடியவில்லையே” என்று கதறி அழுதுள்ளார்.

இதனையடுத்து, அந்த தம்பதி அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், இந்த சம்பவம் தொடர்பாக ஆரம்பத்தில் போலீசார் எந்த கவனமும் செலுத்த வில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்தே, உயர் அதிகாரிகளின் 

கவனத்திற்குச் சென்ற நிலையில், உயர் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்த உத்தரவிட்டனர். அதன் பிறகே, இந்த கொடூர சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், படுகாயமடைந்த நாகேஷ் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, சினிமா பாணியில்.. கணவனைக் கட்டிப் போட்டு கடுமையாகத் தாக்கி, கணவன் கண் முன்னாடியே மனைவியை 4 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், ஆந்திராவில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.