அரசு பஸ் ஒரு கிலோ மீட்டர் ஓடினால் போக்குவரத்து துறைக்கு ரூ.59.15 நஷ்டம்! - பழனிவேல் தியாகராஜன்

அரசு பஸ் ஒரு கிலோ மீட்டர் ஓடினால் போக்குவரத்து துறைக்கு ரூ.59.15 நஷ்டம்! - பழனிவேல் தியாகராஜன் - Daily news

“அரசு பேருந்துகளில் பயணிக்கும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 59 ரூபாய் 15 காசுகள் நஷ்டம் ஏற்படுவதாக” நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

தமிழகத்தின் நிதி நிலை குறித்து, 120 பக்க வெள்ளை அறிக்கையை இன்று தலைமை செயலகத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்.

அந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அதன் படி, அந்த வெள்ளை அறிக்கையில் கவனிக்கப்படக்கூடிய சில முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

அதில், 

-  ஒரு கிலோ மீட்டர் அரசு பேருந்து ஓடினால் 59 ரூபாய் 15 காசுகள் அரசுப் போக்குவரத்து துறைக்கு இழப்பு ஏற்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

- அதற்கு முக்கிய காரணம், டீசல் விலைக்கு ஏற்ப பயண கட்டணத்தை உயர்த்தாததும் போக்குவரத்து துறையின் நஷ்டத்துக்கு மிக முக்கிய காரணம் என்றும், சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. 

- மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப, அரசு பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாத நெருக்கடியில் போக்குவரத்துத் துறை இருக்கிறது.

- மகளிருக்கு இலவச பேருந்து திட்டம் கொண்டு வருவதற்கு முன்பே, போக்குவரத்து துறையில் இந்த நஷ்டம் இருக்கிறது என்றும், சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

- கர்நாடகா, மராட்டியம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை விட தமிழகத்தில் வாகன வரி மிகவும் குறைவாக உள்ளது.

- தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக வாகன வரி மாற்றி அமைக்கப்படாமல் இருப்பது, தமிழக அரசுக்கு நஷ்டம் ஏற்பட மிக முக்கிய காணமாக இருக்கிறது.

- மிக முக்கியமாக, தமிழ்நாட்டில் கடனுறுதி அளவு அதிகமுள்ள துறைகளாக மின் வாரியம், போக்குவரத்து துறை, மின்சார வாரியத்திற்கு 90 சதவீதம் என்ற அளவிலும், போக்குவரத்து துறைக்கு 5 சதவீத கடனுறுதி அளவு உள்ளதும் தெரிய வந்திருக்கிறது.

- குறிப்பாக, தமிழ்நாட்டின் தொழில் துறை உற்பத்தி பீகார், உத்தரப் பிரதேசத்தை விட மோசமாக உள்ளதும் தெரிய வந்திருக்கிறது.

- மேலும், கார்ப்பரேட்டுகளுக்கான வரிவருவாய் விகிதத்தை மத்திய அரசு குறைத்ததால், மாநில அரசுகளுக்கு பாதிப்பு ஏற்கிறது என்றும், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலமாக தெரியவந்திருக்கிறது.

Leave a Comment