“ராணுவத்தில் சேர விரும்பும் பெண்களுக்கான இருவிரல் கன்னித்தன்மை பரிசோதனை” இந்தோனேசியா நாட்டில் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்து உள்ளது, உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.

உலகில் உள்ள மற்ற நாடுகளை ஒப்பிடுகையில், இந்தோனேசியா நாட்டில் மட்டும், ராணுவத்தில் சேர விரும்பும் பெண்களுக்கு “இருவிரல் கன்னித்தன்மை” பரிசோதனை தொடர்ந்து நடத்தப்பட்டு வந்திருக்கிறது.

பெண்களுக்கு நடத்தப்படும் இந்த “இருவிரல் கன்னித்தன்மை” பரிசோதனையானது, “பெண்களை மிகவும் இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாகவும், அதனை நீக்க வேண்டும்” என்றும், பல்வேறு தரப்பிலிருந்தும், பல்வேறு உலக நாடுகளில் இருந்தும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்த வண்ணம் இருந்தன.

அத்துடன், உலக மனித உரிமை அமைப்புகள் இந்தோனேசிய ராணுவத்தின் இத்தகைய கொடூர செயல்பாடுகளைக் கண்டித்து வந்தது. 

அதற்குக் காரணம், “இந்தோனேிசியா அரசின் இத்தகைய செயல்பாடுகள், பெண்களின் கண்ணியத்தை முற்றிலும் இழிவு படுத்துவதோடு, அந்த செயல்பாடுகள் யாவும் பெண்களுக்கு மிக கடுமையான மனக்காயத்தையும் ஏற்படுத்தும் விதமாக உள்ளதாகவும்” பலரும் தொடர்ந்து கண்டனங்கள் தெரிவித்து வந்தனர்.

இப்படியாக, உலகின் பல்வேறு தரப்பிலிருந்தும் தொடர்ந்து கண்டன குரல்கள் எழுந்த நிலையில், “அந்த இருவிரல் பரிசோதனையான கன்னித்தன்மை சோதனையை”  இந்தோனேசிய ராணுவம் தற்போது முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறது. 

அதாவது, இருவிரல் கன்னித்தன்மை பரிசோதனை என்பது, “பெண்களின் பிறப்பு உறுப்பில் இரு விரல்களை செலுத்தி, அவர்களின் கன்னித்திரை கிழியாமல் சரியாக இருக்கிறதா? என்று பரிசோதனை மேற்கொள்ளப்படும் முறையாகும்.

இத்தகைய செயல்பாடு, “இந்த முறையை இந்தோனேசிய ராணுவம், புதிதாக ராணுவத்தில் சேரும் பெண் வீரர்களுக்குச் செய்து வந்திருக்கிறது. 

அத்துடன், இந்த பரிசோதனையில் கன்னித்தன்மை தவறியதாக முடிவுகள் கண்டறியப்பட்டால், அந்த பெண்கள் ராணுவத்தில் சேர முடியாது என்பது, அந்நாட்டின் விதியாக இருந்து வந்திருக்கிறது.

அந்நாட்டில் பழங்காலமாக, “பெண்களின் ஒழுக்கத்தை சோதனை செய்ய இத்தகைய பரிசோதனை முறைகள் மிகவும் முக்கியமானதாக, அந்நாட்டின் ராணுவம் கருதிய நிலையில், அவற்றைக் காலம் காலமாக தற்போது வரை செயல்படுத்தி வந்திருக்கிறது.

இந்த நிலையில், “இது போன்ற பரிசோதனைகளால், கன்னித்தன்மை பற்றி அறிய முடியாது” என்ற உலகச் சுகாதார அமைப்பு கூறியிருக்கிறது. 

“ஒரு பெண் உடலுறவு வைத்துக் கொண்டாரா என்பதைக் கண்டறிய இந்த கன்னித்தன்மை சோதனை பயன்படாது என்றும், உடலுறவு கொண்டவர்களுக்கும் கூட கன்னித்தன்மை அப்படியே இருக்கும் என்றும் கூறியது. 

இதனால், “கன்னித்தன்மை இருந்தால் அந்தப் பெண் கற்பை இழக்கவில்லை என்பதற்கான உத்தரவாதமான விஞ்ஞான பரிசோதனை முறை இது கிடையாது” என்றும், உலகச் சுகாதார அமைப்பு விளக்கம் அளித்திருக்கிறது.

இது குறித்து, இந்தோனேசிய ராணுவத் தலைமை அந்திகா பெர்காசா கூறிய கருத்தில், “கன்னித்தன்மை முழுதும் ஊடுருவப்பட்டது, அல்லது பாதி இல்லை என்பதை உறுதி செய்யும் பரிசோதனைகள் இப்போது நடத்தப்படுவதில்லை என்றும், ஆண்களுக்கும் - பெண்களுக்கும் ராணுவத் தேர்வு சமமாகவே தற்போது நடத்தப்படுகிறது” என்றும், அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, “மிகவும் காட்டுமிராண்டித்தனமான பெண்களின் கன்னித்தன்மை பரிசோதிக்கும் இந்த செயலுக்கு உலகம் முழுவதிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையிலேயே, தற்போது அது முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.