உலக அளவில் மிகவும் பிரம்மாண்டமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான சர்வைவர் நிகழ்ச்சி முதல்முறையாக தமிழ் சின்னத்திரையுலகில் அறிமுகமாகிறது. தமிழில் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான ஜீ தமிழ் தொலைக்காட்சி இந்நிகழ்ச்சியை வழங்குகிறது.தென்னிந்திய சினிமாவின் ஆக்சன் கிங் அர்ஜுன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.  

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் தமிழ் சினிமாவின் பல நட்சத்திரங்களின் பெயர்கள் உலா வருகின்றன. அந்த வகையில் பிரபல தமிழ் நடிகர் நடிகைகளான நந்தா, ஜான் விஜய், கோபிநாத் ரவி,  வனிதா விஜயகுமார், விஜயலட்சுமி, வித்யூலேகா, ஷாலு ஷம்மு, ஸ்ரீரெட்டி, இந்திரஜா ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலரது பெயர்கள் பேசப்பட்டு வருகிறது. 

இதில் நடிகை விஜயலட்சுமி சமீபத்தில் தனது மகன் மற்றும் கணவரோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தது கிட்டத்தட்ட அவர் சர்வைவர்-க்கு செல்வதை உறுதி செய்தநிலையில் தற்போது நடிகை விஜயலட்சுமி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 

விமான நிலையத்திலிருந்து புறப்படும் நடிகை விஜயலட்சுமி வழியனுப்பும் அவரது கணவர் ஃபெரோஸ் முகமது இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். முன்னதாக  விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை விஜயலட்சுமி தற்போது சர்வைவர் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இது குறித்த முழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Feroz Mohamed (@feroz_roz)