மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் 30 வயது மருமகள், 32 வயது வித்தியாசம் கொண்ட 62 வயது மல்டி மில்லியனரை திருமணம் செய்துகொண்ட நிகழ்வு, உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.

பிரிட்டன் சரித்திரத்தை எழுத முற்பட்டால், இளவரசியாக இருந்து மறைந்த டயானா என்றொரு பேரழகியை வர்ணிக்காமல் நிச்சயம் அதனை நிறைவு செய்ய முடியாது. 

பேரழகு கொண்ட இளவரசி டயனாவின் அழகு கதைகள் எல்லாம் இன்றளவும், சுவாராசியமூட்டுவதோடு பிரமிக்கவும் வைக்கின்றன.

அன்பான மனம், அழுத்தமான பார்வை, அழகான சிரிப்பு, துணிச்சலான முடிவுகள் என தனது வாழ்க்கை முழுவதும் தனிப் பெரும் ஆளுமையாக வலம் வந்தார் பிரிட்டன் இளவரசி டயானா. இதனால், டயானாவின் வாழ்க்கையானது, பிரிட்டன் அரச குடும்ப சரித்திரத்திலேயே, அது வரை எவரும் காணாத பல திருப்பங்களைக் கொண்டதாக அமைந்திருந்தது. அவர் மறைந்தாலும் அவர் புகழ் மறையா வண்ணம் கொடிகட்டி இன்னும் பறக்கவே செய்கிறது.

இந்த நிலையில் தான், மறைந்த இளவரசி டயானாவின் சகோதரர் சார்லஸ் ஸ்பென்சரின் 30 வயதான மகள் லேடி கிட்டி ஸ்பென்சர், 62 வயதான மல்டி மில்லியனர் மைக்கேல் லூயிஸை திடீரென்று திருமணம் செய்து கொண்டு உள்ளார். 

ரோம் நகரில் உள்ள ஃப்ராஸ்காட்டியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்களது திருமண விழா, அங்குள்ள தேவாலயத்தில் நடைபெற்று உள்ளது.ரோம் நகரில் நடைபெற்ற இந்த திருமணத்தில், மைக்கேல் லூயிசின் முதல் மனைவிக்குப் பிறந்த 3 மகன்களும் கலந்து கொண்டனர். 

அத்துடன், பிரபல நடிகர் இட்ரிஸ் எல்பாவின் மனைவி சப்ரினா உள்ளிட ஒரு சில முக்கிய பிரபலங்களும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு, புதுமண தம்பதிகளை வாழ்த்தினார்கள்.

இதனையடுத்து, புதுமண தம்பதிகள் இருவரும், தங்களது திருமண நாளில் எடுத்த புகைப்படத்தை, தங்களுக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது பகிர்ந்து உள்ளனர். 

இது தொடர்பாக இன்ஸ்டாவில் புகைப்படத்தைப் பகிர்ந்த மைக்கேல் லூயிஸ், தனது மனைவி பற்றிய சில வரிகளையும் குறிப்பிட்டு உள்ளார்.

அதில், “என் பயங்கர கனவுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு கவுனை உருவாக்கியதற்கு நன்றி” என்றும், மைக்கேல் லூயிஸை குறிப்பிட்டு இருக்கிறார்.

இதனிடையே, மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் 30 வயது மருமகள், 32 வயது வித்தியாசம் கொண்ட 62 வயது மல்டி மில்லியனரை திருமணம் செய்துகொண்ட புகைப்படம், தற்போது உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில், சிலர் எதிர்மறையான கருத்துக்களையும் முன் வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.