50 ஆயிரம் வீடுகளில் சிசிடிவி கேமராக்கள் ஹேக்கிங் செய்யப்பட்டதில், சுமார் 4 ஆயிரம் வீடியோக்கள் ஆபாச இணையதளங்களில் பதிவேற்றப்பட்டதால், குடும்ப பெண்கள் பலரும் பதறிப் போய் உள்ளனர்.

சிங்கப்பூர் நாட்டில் தான் இப்படி ஒரு கொடுமை அரங்கேறி உள்ளது.

சிங்கப்பூர் நாட்டில் பாதுகாப்பு காரணங்களுக்காகப் பலரும் தங்கள் வீடுகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி உள்ளனர். 

பல வீடுகளில் குழந்தைகள், முதியவர்கள், வீட்டுப் பணியாளர்கள், செல்லப் பிராணிகளைத் தொலைவிலிருந்து கண்காணிக்கவே இந்த சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், வீடுகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை பொதுவான இணைய நெறிமுறையான ஐபி கேமராக்களிலிருந்து இந்த சிசிடிவி காட்சிகள் முழுமையாகத் திருடப்பட்டு உள்ளன.

இந்த சிசிடிவி காட்சிகளைத் திருடிய கும்பல் ஒன்று, கிட்டத்தட்ட 50 ஆயிரம் வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஹேக் செய்து, அதிலிருந்து வீடியோக்களை திருடி உள்ளது. குறிப்பாக, 50 ஆயிரம் வீடுகளில் திருடப்பட்ட அந்த சிசிடிவி காட்சிகளையும், அந்த கும்பல் ஆபாச இணையத்தில் பதிவேற்றம் செய்து உள்ளது. 

ஆபாச தளத்தில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோக்கள் ஒவ்வொன்றும் சுமார் 20 நிமிடங்கள் முதல் தொடங்குகிறது. இதில், பாலூட்டும் தாய்மார்கள் முதல் குழந்தைகள் வரை பலரும் இந்த காட்சியில் இருக்கிறார்கள். 

அந்த வீடியோக்களில் பெரும்பாலானவர்கள் ஆடைகளற்ற நிலையில் அல்லது மேலாடைகளோடு மட்டுமே காட்சி தருகின்றனர். முக்கியமாகக் குளியலறை, கழிப்பறை, படுக்கை அறை உள்ளிட்ட வீட்டின் பல இடங்களில் அவர்கள் இருப்பது ஆபாசமாக, அல்லது மிகவும் சுதந்திரமாக வீட்டில் தனியாக இருப்பது போன்ற பல காட்சிகள் அதில் இடம் பெற்றிருக்கின்றன.

குறிப்பிட்டு சொல்லும் படியான ஒரு வீடியோவில், சிறுமி ஒருவர் வெள்ளை நிற டி சர்ட்டுடன் வெறுமென உள்ளாடையோடு புத்தகங்களோடு அமர்ந்திருப்பது உட்பட, பல வீடியோவில் அந்த ஆபாச தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த அந்நாட்டு போலீசார், அந்த வீடியோக்களை நெருக்கமாகப் பரிசோதித்துப் பார்த்த போது, ஐபி கேமராக்களை ஹேக்கிங் செய்ய ஒரு குழு ஒன்று இதன் பின்னால் இருந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கிட்டத்தட்ட 3TB க்கும் மேற்பட்ட கிளிப்களை, அந்த கும்பல் பகிர்ந்து கொண்டதாகக் கூறுபடுகிறது. இதற்காக அவர்கள் ஒரு முறை தவணையாக 150 அமெரிக்க டொலர் சந்தாவைச் செலுத்தியுள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. 

முக்கியமாக, ஹேக் செய்யப்பட்ட காட்சிகளிலிருந்து சுமார் 4 ஆயிரம் வீடியோக்களும் படங்களும் அடங்கிய 700MB மாதிரி இலவசமாகப் பார்வையாளர்களுக்கு அந்த குறிப்பிட்ட தளத்தில் வழங்கப்பட்டு இருக்கிறது.

இது தொடர்பாக விசாரணை நடத்தும் போலீசார், “உங்கள் கேமரா பாதுகாப்பானது என்று, ஒரு போதும் நம்ப வேண்டாம்” என்று, எச்சரித்து உள்ளனர். இதனால், அந்நாட்டுக் குடும்ப பெண்கள் அதிர்ச்சியும், பீதியும் அடைந்து உள்ளனர்.