பின்லாந்து பிரதமர் சன்னா மெரின், தன்னுடைய 16 வருட லிவிங் டுகெதர் வாழ்க்கையின் நீண்டநாள் காதலரான மார்கஸ் ரெய்கோனனை முறைப்படி திருமணம் செய்துகொண்ட நிகழ்வு வைரலாகி வருகிறது.

கொரோனா உலகையே பயமுறுத்தி வைத்திருக்கிறது. இப்படிப்பட்ட இந்த இக்காட்ட சூழலிலும், தன்னுடைய நீண்ட நாள் காதல் வாழ்க்கைக்கு மகுடம் சூடி இருக்கிறார் பின்லாந்து பிரதமர் சன்னா மெரின்.

உலகை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த வலியான பெண்மணிகளில் ஒருவராகத் திகழ்கிறார் பின்லாந்து நாட்டின் பிரதமர் சன்னா மெரின். தற்போது, இந்த கொரோனா காலத்திலும், தன் திருமணம் மூலம் மீண்டும் உலகையே தன்னை திரும்பிப் பார்க்கும் படி செய்திருக்கிறார்.

பின்லாந்து நாட்டின் பிரதமர் சன்னா மெரின், அரசியலுக்கு வந்து 7 ஆண்டுகளில் பிரதமர் ஆகியிருக்கிறார். இளம் பெண் பிரதமர் என்ற சிறப்பையும் சன்னா மெரின், தனதாக்கி பெருமை சேர்த்திருக்கிறார்.

தற்போது 34 வயதாகும் பிரதமர் சன்னா மெரின், தனது நீண்டகால காதலரும், கால்பந்தாட்ட வீரரும் ஆன மார்கஸ் ரெய்கோனுடன் கடந்த 16 ஆண்டுகளாகத் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். அதாவது, தாலி கட்டிக்கொள்ளாமலே இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக இருக்கும் லிவிங் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். இந்த 16 வருட லிவிங் டுகெதர் வாழ்க்கையை தற்போது, ஒரு படி மேலே கொண்டு சென்றுள்ளார். 

ஆம், பிரதமர் சன்னா மெரின் - கால்பந்தாட்ட வீரர் ஆன மார்கஸ் ரெய்கோனை தற்போது முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளார்.

அதே நேரத்தில், சன்னா மெரின் - மார்கஸ் ரெய்கோன் காதல் ஜோடிக்கு, ஏற்கனவே எம்மா அமலியா மெரின் என்ற 2 வயது மகள் உள்ளார். 

இந்நிலையில், இந்த காதல் ஜோடி தற்போது முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமண விழாவில், இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர் என்று வெறம் 40 விருந்தினர்கள் மட்டுமே கலந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. கொரோனா காரணமாக மற்றவர்களுக்கு அழைப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும், திருமணம் செய்துகொண்டது தொடர்பாகத் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பின்லாந்து பிரதமர் சன்னா மெரின், “நான் விரும்பும் மனிதனுடன் என் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்வதில் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

“நாங்கள் ஒன்றாக நிறையப் பார்த்திருக்கிறோம், அனுபவித்திருக்கிறோம். சந்தோஷங்களையும், துக்கங்களையும் பகிர்ந்து கொண்டோம். எங்களை நாங்கள் ஒருவருக்கு ஒருவர் ஆதரித்தோம்” என்றும், அவர் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். அத்துடன், தன் திருமணம் செய்துகொண்ட புகைப்படங்களையும் அவர் 

பகிர்ந்துள்ளார். இதனால்,  பின்லாந்து நாட்டின் பிரதமரின் திருமணத்திற்கு, அந்நாட்டு மக்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனால், பின்லாந்து பிரதமர் சன்னா மெரின் திருமண வைபோக நிகழ்வு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.