உலகளவில் டாப் 10 கோடீஸ்வரர்கள் யார் என்ற விபரங்களை போர்ப்ஸ் நிறுவனம் பட்டியல் வெளியிட்டுள்ளது. இதில், இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி 9 வது இடம் பிடித்துள்ளார். 

உலக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்றபடி, உலக கோடீஸ்வரர்கள் சொத்து மதிப்பு அவ்வப்போது மாறுபாட்டைச் சந்திப்பது வழக்கம். 

World top 10 richest people Mukesh Ambani at ninth place

இதனிடையே, கடந்த கடந்த ஜனவரி மாதம் முதல் உலக அளவில் கொரோனா தாக்கம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இதனால், உலக அளவில் பொருளாதாரம் மிகப் பெரிய சரிவை சந்தித்துள்ளன.

இந்நிலையில், உலக அளவில் அதிக சொத்துக்கள் உள்ள உலகின் முதல் 10 பணக்காரர்களின் பட்டியலை, போர்ப்ஸ் நிறுவனம் தற்போது பட்டியலிட்டுள்ளது. . 

அதன்படி, அமேசான் நிறுவனத்தின் சி.இ.ஓ, உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு 158.9 பில்லியன் அமெரிக்க டாலர் என்று போர்ப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 2 ஆம் இடத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடம் பெற்றுள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு 109.4 பில்லியன் அமெரிக்க டாலர் என்றும் போர்ப்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

World top 10 richest people Mukesh Ambani at ninth place

கோடீஸ்வரர்கள் பட்டியலில் 3 ஆம் இடத்தில், LVMH நிறுவனத்தின் சி.இ.ஓ பெர்னார்ட் மற்றும் அவரின் குடும்பத்தினர் இடம் பெற்றுள்ளனர். அவர்களது நிகர சொத்து மதிப்பு 105.1 பில்லியன் அமெரிக்க டாலர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், பேஸ்புக் நிறுவனத்தின் சி.இ.ஓ மார்க் ஸக்கர்பெர்க் இந்த பட்டியலில் 4 ஆம் இடத்தில் உள்ளனர். அவரது தற்போதைய சொத்து மதிப்பு 86.9 பில்லியன் அமெரிக்க டாலர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அதேபோல், Berkshire Hathaway நிறுவனத்தின் சி.இ.ஓ வாரன் ஃபப்பெட் பட்டியலில் 5 ஆம் இடத்தில் உள்ளார். அவரது தற்போதைய சொத்து மதிப்பு 71.8 பில்லியன் அமெரிக்க டாலர் என்றும், அமெரிக்க தொழிலதிபர் ஸ்டீவன் பால்மரின் தற்போதைய சொத்து மதிப்பு 69.2 பில்லியன் அமெரிக்க டாலர் என்றும், அவர் பட்டியலில் 6 ஆம் இடத்தில் உள்ளார் என்றும் போர்ப்ஸ் கூறியுள்ளது.

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 7 ஆம் இடத்தில், அமெரிக்க தொழிலதிபர் லார்ரி எல்லிசன் உள்ளார். அவரது தற்போதைய சொத்து மதிப்பு 68.1 பில்லியன் அமெரிக்க டாலர் என்றும், ஸ்பெயின் தொழிலதிபர் Amancio Ortega வின் தற்போதைய சொத்து மதிப்பு 66.1 பில்லியன் அமெரிக்க டாலர் என்றும், இவர் பட்டியலில் 8 ஆம் இடத்தில் உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

World top 10 richest people Mukesh Ambani at ninth place

இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி பட்டியலில் 9 ஆம் இடத்தில் உள்ளார். அவரது தற்போதைய சொத்து மதிப்பு 64.6 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 10 ஆம் இடத்தில், அமெரிக்க கணினியியல் வல்லுநர் லாரி பேஜ் உள்ளார். அவரது தற்போதைய சொத்து மதிப்பு 64.5 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளதாக போர்ப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.