சின்னத்திரையில் தவிர்க்க முடியாத முன்னணி தொகுப்பாளினிகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் திவ்யதர்ஷினி எனும் DD.விஜய் டிவியில் பல பிரபல ஷோக்களை தொகுத்து வழங்கிவந்தவர் இவருக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது அவ்வப்போது விருதுநிகழ்ச்சிகள்,இசை வெளியீட்டு விழா உள்ளவற்றையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

இது தவிர பவர்பாண்டி,சர்வம் தாள மயம் உள்ளிட்ட முக்கிய படங்களிலும் நடித்து கவனம் ஈர்த்துள்ளார.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஸ்பீட் கெட் செட் கோ மற்றும் எங்கிட்ட மோதாதே உள்ளிட்ட சூப்பர்ஹிட் ஷோக்களை கடைசியாக தொகுத்து வழங்கியிருந்தார்,மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடியின் சமீபத்திய சீசனின் நடுவராகவும் இருந்திருந்தார்.

கொரோனா நேரத்தில் இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருந்த DD , அவ்வப்போது தனது நடன வீடியோக்கள் , புகைப்படங்கள் , வீடியோக்கள் உள்ளிட்டவற்றை பகிர்ந்து வந்தார்.மேலும் ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கும் பதிலளித்து வந்தார் DD.

கொரோனா முடிந்து நிகழ்ச்சிகள் ஷூட்டிங் ஆரம்பித்த பின் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் இருந்த DD தற்போது விஜய் டிவியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சியான சூப்பர் சிங்கரின் புதிய சீசனில் பங்கேற்றுள்ளார்.இதன் புகைப்படங்கள் வெளியாகி செம வைரலாகி வருகின்றன.

A post shared by MA KA PA Anand (@makapa_anand)