“மனைவியை - கணவன் கொல்வதும்.. கணவனை - மனைவி கொல்வதும்.. வாடிக்கையாக நடக்கும் ஒன்று என்று,” திருமண விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசி உள்ளது பெரும் வைரலாகி வருகிறது.

தமிழக அரசியலில் உறக்க பேசி வந்த திமுக பொதுச் செயலாளர் வைகோ, கடந்த சில ஆண்டுகளாகவே சத்தமே இல்லாமல் இருந்து வந்தார்.

அதன் தொடர்ச்சியாக, அவரது கட்சிகுள் ஏற்பட்ட சில குழப்பங்கள் என்று, பொது வெளியில் அதிகம் தலைகாட்டாமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் தான், தற்போது திருமணத்தை நடத்தி வைத்து வைகோ பேசி உள்ளது, இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

அதாவது, திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரியில் இருக்கும் தனியார் திருமண மண்டபத்தில் நேற்றைய தினம் மதிமுக தொண்டர் இல்லத் திருமண விழா நடைபெற்றது.

இந்த திருமண விழாவில் கலந்துகொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்த திருமணத்தை நடத்தி வைத்தார். மணமக்கள் தாலி கட்டி முடித்தப் பிறகு,  மணமக்கள் கோபால்சாமி - கற்பகவள்ளி தம்பதிக்கு, திருக்குறள் தெளிவுரை புத்தகத்தை வைகோ பரிசாக அளித்தார்.
 
பின்னர், இந்த திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தி பேசிய பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “மகிழ்ச்சி, புன்முறுவல், கண்ணீர் ஆகியவை கலந்தது தான் வாழ்க்கை” என்று, குறிப்பிட்டார்.

“ஆனால், தமிழகத்தில் அண்மைகாலமாக பத்திரிகைகளை பார்த்தாலே கணவன் - மனைவியை கொலை செய்தார்; மனைவி - கணவனை கொலை செய்தார் என்ற செய்திதான் அதிகம் வருகிறது. இந்த செய்திகள் வேதனை அளிக்கின்றன” என்றும், பெரும் கவலையைத் தெரிவித்தார்.

மேலும், “தம்பதியினர், உயிருக்கு உயிராக ஒருவருக்கு ஒருவராக இருக்க வேண்டும் என்றும், கணவன் - மனைவிக்கு இடையே இப்படிப்பட்ட பேதங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து விட்டது” என்றும் சுட்டிக்காட்டிய வைகோ, “மணமக்கள் இருவரும், ஈருடல் ஓருயிராக வாழ வேண்டும்” என்றும், மனமார வாழ்த்தி பேசினார்.

இதனிடையே, நடிகர் வடிவேலு ஒரு படத்தில் மணமக்களை வாழ்த்தி பேசும் போது, அவர்களை புகழ்வது போல், தமாசு பண்ணியிருப்பார். இதனை ஒப்பிட்டு, பலரும் வைகோ திருமண விழாவில் கலந்துகொண்டு பேசியது, தற்போது இணையத்தில் பலரும் ட்ரோல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.