உலக நாயகனின் தீவிர ரசிகரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் FAN BOY சம்பவமாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று மெகாஹிட் பிளாக்பஸ்டர் ஆகியுள்ளது. கமல்ஹாசனுடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி & ஃபகத் பாசில் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் தற்போது பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

சினிமா ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள், பின்னணி இசை மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை என அனைத்தும் ரசிக்கும்படியாக அமைந்தது. தொடர்ந்து ரிப்பீட் மோடில் ரசிகர்கள் விக்ரம் திரைப்படத்தை கொண்டாடி வரும் நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து விக்ரம் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய 13 பேருக்கும் 13 அப்பாச்சி பைக்கை பரிசளித்த உலக நாயகன் கமல்ஹாசன் ரோலக்ஸ் எனும் சிறிய கதாபாத்திரத்தில் 3 நிமிடங்கள் தோன்றினாலும் ஒட்டுமொத்த திரையரங்குகளை அதிர வைத்த நடிகர் சூர்யாவை நேரில் சந்தித்து அவருக்கு விலை உயர்ந்த ROLEX கைக்கடிகாரம் பரிசாக அளித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

இந்நிலையில் விக்ரம் திரைப்படத்தின் வெற்றி விழாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல்ஹாசன் இருவரும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது தளபதி விஜயுடன் இணைந்து குறித்து கமல்ஹாசனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த கமல்ஹாசன், “வாய்ப்பு உள்ளது! நாங்கள் பேசியிருக்கிறோம்! அதற்கு நேரம் வர வேண்டும்… அதற்கான கதை வரவேண்டும்… அவருக்கும் அதற்கான நேரம் இருக்க வேண்டும்… எனக்கும் அதற்கான ஏற்பாடுகளை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அவரை “ஐயா” என்று சொல்லிவிட்டேன். அதற்கு என்ன அர்த்தம் என்றெல்லாம் கேட்கிறார்கள்… ஒன்றுமில்லை! சிவாஜி கணேசன், கமல்ஹாசன் ஐயா அவர்களே! என்பார்… அது ஒரு பாசத்தில் சொல்வது… அதுபோலத்தான்… என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தளபதி விஜயுடன் இணைவது குறித்து கமல்ஹாசன் பேசிய அந்த வீடியோ இதோ…