8 வருடத் திருமண வாழ்க்கை வாழ்ந்த பிறகும், திருமணத்திற்கு முன்பு காதலித்த காதலனோடு பெண் ஒருவர் தனது குழந்தைகளுடன் மாயமான சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

திருச்சி புத்தூர் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவர், கோயம்புத்தூரில் அரசு பஸ் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரம்யா என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இரு வீட்டார் முறைப்படி திருமணம் நடைபெற்று உள்ளது. 

திருமணத்திற்குப் பிறகு, மகாலிங்கம் - ரம்யா தம்பதிகள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருந்த நிலையில், இந்த தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகளும் பிறந்து உள்ளது. தம்பதிகளுக்குக் குழந்தை பிறந்த பிறகும், இவர்களது திருமண வாழ்க்கை சந்தோசமாகவே சென்றுகொண்டு இருந்து உள்ளது.

இந்நிலையில் தான், இந்த தம்பதிகளின் வாழ்க்கையில் புயல் வீசத் தொடங்கி உள்ளது. அதாவது, திருச்சியில் இருக்கம் தனது உறவினர்களிடம் இருந்து கோவையில் வேலை பார்த்து வரும் மகாலிங்கத்திற்கு போன் வந்து உள்ளது.

அப்போது பேசிய உறவினர்கள், “ரம்யா குழந்தைகளுடன் மயமாகி விட்டதாக” கூறி உள்ளனர். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த மகாலிங்கம், கோவையிலிருந்து திருச்சிக்கு வந்து உள்ளார். வீட்டிற்கு வந்து பார்த்த அவர், வீட்டில் மனைவி மற்றும் இரு குழந்தைகளும் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளார். அத்துடன், மனைவி மற்றும் இரு குழந்தைகளின் துணிகளும் மாயமாகி இருந்தது. இதனையடுத்து, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் அவர் “என்ன நடந்தது?” என்று விசாரித்து உள்ளார். ஆனால், மனைவி மாயமானது குறித்து எந்த தகவலும் கிடைக்க வில்லை. 

இதனையடுத்து, உறையூர் கால் நிலையத்தில் மனைவி மாயமானது குறித்து புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

போலீசார் மேற்கொண்ட விசாரணையில், “ரம்யாவிற்கு திருமணத்திற்கு முன்பே வேறு ஒரு நபரை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து, ரம்யா தன் குழந்தைகளுடன் தன்னுடைய முன்னால் காதலன் உடன் சென்றதும் தெரிய வந்தது” இதைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த கணவன் மகாலிங்கம், காவல் நிலையத்திலேயே கதறி அழுதுள்ளார். 

மேலும், “குழந்தைகளுடன் மாயமான அந்த பெண் எங்குச் சென்றார், எங்குத் தங்கி இருக்கிறார்?” என்றும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, 8 வருடத் திருமண வாழ்க்கைக்குப் பின்னர், திருமணத்திற்கு முன்பு இருந்த காதலனோடு தனது இரு குழந்தைகளுடன் பெண் ஒருவர் ஓட்டம் பிடித்துள்ள சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.