வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திற்கு பிறகு STR , ஹன்சிகா நடிக்கும் மகா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து STR 45 படத்திலும் நடித்து வந்தார்.வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவிருக்கும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன் தொடங்கியது.கல்யாணி ப்ரியதர்ஷன் இந்த படத்தின் ஹீரோயினாக நடிக்கிறார்.எஸ்.ஏ.சந்திரசேகர்,பாரதிராஜா,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.யுவன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

கொரோனா காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் தள்ளிபோயுள்ளது.STR என்ன செய்தாலும் அவரை பற்றி என்ன செய்தி வந்தாலும் அது வைரலாகி விடும்.சமீபத்தில் இவரது சமையல்,ஜாகிங் வீடியோக்கள் வைரலாகி வந்தன.கெளதம் மேனன் இயக்கிய குறும்படத்திலும் வீட்டிலிருந்தே நடித்து கொடுத்திருந்தார்.

மாநாடு படத்திற்கு முன் STR ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.தற்போது இந்த படம் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளது.பாண்டியநாடு,ஜீவா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய சுசீந்திரன் இந்த படத்தை இயக்கவுள்ளார் என்றும் சிம்பு சினி ஆர்ட்ஸ் இந்த படத்தை தயாரிக்கவுள்ளனர் என்ற தகவலும் கிடைத்துள்ளது.இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடிக்கவுள்ளனர் என்றும் , இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த வாரம் தொடங்கி ஒரு மாதத்திற்குள் இந்த படத்தின் ஷூட்டிங் மொத்தமாக முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.