17 வயது சிறுமியை காதலித்து ஏமாற்றிய இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகில் உள்ள பல்லக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான சாந்தகுமார், அங்குள்ள கார்கூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை, காதலிப்பதாகக் கூறி பழகி வந்துள்ளார்.

 Man who cheated teenage girl arrested in POCSO

இதனிடையே, சிறுமி என்றும் பாராமல், திருமணம் செய்துகொள்வதாக அவரிடம் ஆசைவார்த்தைகள் கூறி, சிறுமியின் மனசை மாற்றி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதில், அந்த 17 வயது சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அங்குள்ள குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சாந்தகுமாரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், போக்சோ உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர். 

மேலும், கருவுற்ற சிறுமியை குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.