கொரோனா அச்சுறுத்தலால், தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் 3 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூரைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர், வேலை விசயமாக வெளியூர் சென்ற இடத்தில், ஊரடங்கு உத்தரவால் ஊர் திரும்ப முடியாமல் சிக்கிக்கொண்டார்.

 Girl kept in Corona isolation ward gang raped

இதனையடுத்து, 21 நாட்கள் ஊரடங்கு முடிந்து வீடு திரும்பலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தபோது, ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் 2 வது முறையாக நீட்டிக்கப்பட்டது.

இதனால், நடந்தே ஊர் திரும்பலாம் என்று முடிவெடுத்து, அவர் தனியாக நடந்தே ஊர் திரும்பி உள்ளார். அப்போது, அங்குள்ள மதோபூர் படோடா பகுதியில் சென்றுக்கொண்டிக்கும்போது, இரவு நேரம் ஆனதால், அந்த பகுதியில் உள்ள போலீசாரிடம் இரவு மட்டும் தங்குவதற்கு உதவி கேட்டுள்ளார்.

போலீசாரும், அந்த பகுதியைச் சேர்ந்தவர்களிடம், அந்த பெண் இரவு தங்குவதற்கு உதவி கேட்டுள்ளார். ஆனால், அந்த பெண் வெளியூரிலிருந்து வந்திருப்பதால், அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்று அஞ்சிய அப்பகுதி மக்கள், அந்த பகுதியில் உள்ள பள்ளியில் தனிமையில் தங்க வைக்கலாம் என்று ஊர் மக்கள் ஆலோசனை கூறி உள்ளனர்.

அதன்படி, போலீசார் அந்த பெண்ணை, அந்த பள்ளியில் தனிமையில் தங்க வைத்துவிட்டு சென்றுவிட்டனர்.

 Girl kept in Corona isolation ward gang raped

அப்போது, நள்ளிரவு நேரத்தில் அதே பக்கதியைச் சேர்ந்த 3 இளைஞர்கள், அந்த பள்ளிக்கு வந்து, அந்த பெண்ணை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனையடுத்து, 3 பேரும் அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாகக் காலையில் அங்கு போலீசார் வந்த நிலையில், இரவு தனக்கு நேர்ந்த அவலங்கள் குறித்து, அந்த பெண் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக வழக்கப் பதிவு செய்த போலீசார், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரையும் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, கொரோனா அச்சுறுத்தலால், தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண், 3 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.