விழுப்புரம் அருகே காரில் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் அருகே உள்ள கெடார் பகுதியைச் சேர்ந்த 24 வயது சுபாஷ் என்ற இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த தன்னுடைய 18 வயது தோழி ஒருவருக்கு போன் செய்து, “உனக்கு சுடிதார் வாங்கி வைத்திருக்கிறேன். நேரில் வந்து வாங்கிக்கொள்” என்று கூறி, ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரச்சொல்லியிருக்கிறார். 

Woman raped in car in Villupuram

நண்பனின் வார்த்தையை நம்பிச் அந்த 18 வயது இளம் பெண்ணும், அந்த இடத்திற்குச் சென்றுள்ளார். ஆனால், குறிப்பிட்ட அந்த இடத்தில் சுபாஷ் மற்றும் அவரது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த 25 வயதான விக்னேஷ், மற்றொரு சுபாஷ் ஆகிய 3 பேரும், காருடன் நின்றுகொண்டிருந்துள்ளனர்.

அந்த நேரத்தில், அந்த இளம்பெண் அங்கு வந்துள்ளார். அப்போது, முன்னேற்பாடுகளுடன் நின்ற அந்த 3 இளைஞர்களும், உடனடியாக அந்த இளம் பெண்ணை, வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி உள்ளனர்.

Woman raped in car in Villupuram

இதனையடுத்து, அவர்கள் 3 பேரும் அந்த இளம் பெண்ணை காரின் பின்பக்க இருக்கையில் வைத்து, மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இச்சைகள் எல்லாம் தீர்ந்த பிறகு, அந்த பெண்ணை பெரிய மனதுடன் விடுவித்துள்ளனர். இதனால், அழுதபடியே வீடு திரும்பிய அந்த பெண், நடந்ததை, தன் பெற்றோரிடம் கூறி கதறி உள்ளார்.

பின்னர், அங்குள்ள செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், அந்த பெண் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 3 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும், அவர்கள் பயன்படுத்திய செல்போன் மற்றும் அந்த காரையும் பறிமுதல் செய்தனர்.

இதனிடையே, விழுப்புரம் அருகே காரில் வைத்து இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.