9 ஆம் வகுப்பு படிக்கும் மகளை, தந்தையே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் செம்பனார்கோவில் அடுத்துள்ள ஆக்கூரை சேர்ந்த 9 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி, ஊரடங்கில் வீட்டிலிருந்து வந்துள்ளார்.

Father who raped daughter in Nagai

இந்நிலையில், அவர் திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்டு, அப்பகுதியில் உள்ள மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு, அந்த சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் 2 மாதம் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனர். இதனையடுத்து, மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு, மருத்துவமனை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, விரைந்து வந்த போலீசார் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். 

இந்த விசாரணையில், சிறுமியின் தந்தையே, மகள் என்றும் பாராமல் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

Father who raped daughter in Nagai

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், சிறுமியிடம் வாக்குமூலத்தைப் பெற்று, சிறுமியின் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்தனர்.

மேலும், சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்டு தற்போது மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்குத் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதனிடையே, பெற்ற மகளைத் தந்தையே கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து, கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.