தொழில்நுட்ப கோளாறு காரணமாக தமிழக காவல்துறையின் அவசர அழைப்பு எண் 100 தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் அனைவரும் தங்களது அவசர தேவைக்காக காவல்துறையைத் தொடர்புகொள்ள 100 மற்றும் 112 ஆகிய எண்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர்.

Police Control Room Number Temporary change in TN

இதனிடையே, நேற்று மாலை பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் திடீரென்று தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதனால், பொதுமக்கள் 100 மற்றும் 112 எண்களை அவசர தேவைக்காக அழைக்கும்போது காவல் கட்டுப்பாட்டு அறையில் இணைப்பைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

Police Control Room Number Temporary change in TN

இதன் காரணமாக, பொதுமக்கள் அவசர தேவைக்காகக் காவல் துறையினரைத் தொடர்புகொள்ள தற்காலிகமாக 044 -71200100, 044 - 46100100 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு, காவல் துறை தற்போது அறிவித்துள்ளது.

இதனால், இனி பொதுமக்கள் 100 என்ற எண்ணை பயன்படுத்துவதற்காக மாறாக, 044 -71200100, 044 - 46100100 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டால், போலீசாரின் அவசர உதவியை பெறலாம்.