ஊரடங்கு காலத்தில், தைல காட்டில் தனிமையிலிருந்த காதல் ஜோடி ஒன்று, போலீசாரின் ட்ரோனை பார்த்ததும் தெரிந்து ஓடிய சம்பவம் வைரலாகி வருகிறது.

நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாத நிலையில், தமிழகம் உட்பட இந்தியா முழுமைக்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

coronavirus police drone lovers gummidipoondi

இதனால், பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும், யாரும் தேவையின்றி வெளியே வரக்கூடாது என்றும் போலீசார் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், தமிழகத்தின் பல இடங்களில் ஊருக்கு ஒதுக்குப் புறமாகப் பல இளைஞர்கள் ஒன்றாக சேர்ந்து விளையாடி வருவதாகவும், சேர்ந்து அரட்டை அடிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன.

coronavirus police drone lovers gummidipoondi

இதனால், பல பகுதிகளில் போலீசார் ட்ரோன் கேமரா மூலம் ஊரை கண்காணித்து வருகின்றனர். போலீசாரின் இந்த ட்ரோன் கேமாராவை பார்க்கும் பல இளைஞர்களும், 4 புறமும் தெரிந்து ஓடுகின்றனர்.

அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள ஏரிக்கரை பகுதியை போலீசார் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்தனர். அப்போது, கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள் அனைவரும் ட்ரோனை கண்டதும், அருகில் உள்ள தண்ணீரில் நீந்தியும், மரத்தில் ஏறியும், முகத்தை மூடியும் 4 புறமும் தப்பி ஓடினர். 

coronavirus police drone lovers gummidipoondi

இதனைத்தொடர்ந்து, அந்த ட்ரோன் கேமரா அங்கிருந்து மரங்கள் சற்று அதிகம் உள்ள இடத்திற்குச் சென்றது. அங்கு, உள்ள தைலம் காட்டுக்குள் ஒரு காதல் ஜோடி, மடியில் படுத்தப்படி ரொமன்ஸ் செய்துகொண்டு இருந்தார்கள். அப்போது, இந்த ட்ரோன் கேமராவை பார்த்ததும் அந்த காதல் ஜோடி முகத்தை மறைத்தபடியே, தங்களுடைய இருசக்கர வாகனத்தில் ஏறி அங்கிருந்து வேக வேகமாகத் தப்பித்துச் செல்கின்றனர்.

அந்த காதல் ஜோடி, வேக வேகமாக அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் சென்றாலும், அவர்களை விடாமல் அந்த ட்ரோன் கேமரா துரத்திச் செல்கிறது. இந்த காட்சிகள் அனைத்தையும், போலீசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.

coronavirus police drone lovers gummidipoondi

இதனிடையே, தைல காட்டில் தனிமையிலிருந்த காதல் ஜோடி ஒன்று, போலீசாரின் ட்ரோனை பார்த்ததும் தெரித்து ஓடுவது, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.