சென்னையில் விவகாரத்தான பெண்ணுடன் மீண்டும் திருமணம் செய்து வைத்ததால், மன உளைச்சல் ஆன மாப்பிள்ளை, தன் மீது பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை மதுரவாயல் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த 34 வயதான பிரித்வி ராஜ், சென்னை பாடியில் தினசரி வேலை செய்து வந்தார். 

இதனிடையே, பிரித்வி ராஜ்க்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு, சத்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு, கணவன் - மனைவி இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, கணவன் - மனைவி இடையே நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வந்ததால், இருவரும் பிரிந்து சென்றனர்.

இதனையடுத்து, இருவரும் நீதிமன்றத்தை நாடிச் சென்று கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விவகாரத்து பெற்றனர். அதனைத் தொடர்ந்து, பிரித்வி ராஜூக்கு அவரது வீட்டில் வேறொரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, அதன் படி பெண் பார்த்து வந்தனர். 

இந்த தகவல் பிரித்வி ராஜூன் முன்னாள் மனைவிக்கு வீட்டிற்குத் தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த பிரித்வி ராஜூன் முன்னாள் மனைவியின் அண்ணன் - தம்பிகளான  தாமு, இளையராஜா, அவரது நண்பர்கள் சேர்ந்து, கடந்த 6 ஆம் தேதி பிரித்வி ராஜ் பணி புரியும் சென்னை அம்பத்தூர் பகுதியில் உள்ள இடத்திற்கு சென்று, அவரை கடுமையாகத் தாக்கி உள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, மாமல்லபுரத்தில் உள்ள முன்னாள் மனைவியின் வீட்டிற்கு அவரை அழைத்துச் சென்று, பிரித்வி ராஜை கட்டாயப்படுத்தி, மீண்டும் முன்னாள் மனைவி உடன் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்துள்ளனர். அத்துடன், பெண் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்றும்,  பிரித்வி ராஜை, அவர்கள் கடுமையாக மிரட்டி உள்ளனர்.

இதனால், சிறைப்பட்ட மனிதனாகத் தவித்து வந்த பிரித்வி ராஜ், மாமல்லபுரத்தில் உள்ள பெண் வீட்டிலிருந்து நேற்று தப்பித்து அங்கிருந்து வெளியேறி உள்ளார்.

மேலும், தன் வீட்டிற்கு வந்த பிரித்வி ராஜ், கடும் மன உளைச்சலில் அவதிப்பட்டு உள்ளார். அதன் பிறகு, இன்று அதிகாலை திடீரென்று தன் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ பற்ற வைத்து உள்ளார். தீ பற்றி எரிந்த நிலையில், அவரின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, தீயை அணைத்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்குச் சிகிச்சை பெற்று வந்த பிரித்வி ராஜ், சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்து உள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த மதுரவாயல் போலீசார்,  பிரித்வி ராஜை தற்கொலைக்குத் தூண்டியதாக அவரின் மனைவியின் சகோதரர்கள் தாமு, இளையராஜா ஆகியோரைத் வலை வீசி தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதனிடையே, சென்னையில் விவகாரத்து பெற்ற பெண்ணுடன் மீண்டும் மிரட்டி திருமணம் செய்து வைத்ததால், மன உளைச்சலுக்கு ஆளான மாப்பிள்ளை தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அந்த பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதே போல், ஆண்டிபட்டி அருகே தன்னுடன் வாழ மறுத்த மனைவியைக் கத்தியால் குத்திவிட்டு, சுமார் 50 அடி ஆழ கிணற்றுக்குள் பதுங்கிக் கொண்ட கணவனை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அடுத்த மறவப்பட்டியைச் சேர்ந்த 27 வயதான சடையாண்டிற்கும், அதே பகுதியைச் சேர்ந்த 22 வயதான ஈஸ்வரி என்ற பெண்ணுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு தற்போது ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இதனிடையே, மது போதைக்கு அடிமையான சடையாண்டி, வேலைக்குச் செல்லாமல், ஊர் முழுவதும் கடன் வாங்கி குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்துள்ளார். இதனால், ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, கணவன் - மனைவி இருவரும், கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து விட்டனர். இதன் காரணமாக, ஈஸ்வர் அவரின் தாயாரின் வீட்டில் தன் குழந்தை உடன் வசித்து வருகிறார். 

இந்நிலையில், நேற்று இரவு மனைவி ஈஸ்வரியை தேடி அங்க வந்த சடையாண்டி, மனைவி உடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை கத்தவிட்டு, தப்பி ஓடி உள்ளார்.

பின்னர், ஈஸ்வரி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள சடையாண்டியை தேடி வந்தனர்.
 
இந்நிலையில் தலைமறைவான சடையாண்டி அந்த பகுதியில் உள்ள சுமார் 50 அடி ஆழ கிணற்றில் இறங்கி இரவு முழுவதும் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. இது குறித்து விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் அவரை மீட்டு, போலீசார் கைது செய்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.