மதுரையில் 6 வயசு சிறுமிக்கும், 8 வயசு சிறுவனுக்கும் ஒரே நேரத்தில் இளைஞன் ஒருவன் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்த வில்லா புரம் பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவரின் மகன் பாலசுப்ரமணியன், அதே பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு இரும்பு பட்டறையில் பணியாற்றி வந்தார்.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக, இரும்பு பட்டறை மூடப்பட்டது. இதன் காரணமாக, அவர் வேலை இல்லாமல் தவித்து வந்த நிலையில், சாப்பாட்டிற்கு சிரமப்பட்டு வந்துள்ளார். 

மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியன், அன்றாட வருமானத்துக்காக அந்த பகுதியில் சைக்கிளில் சென்று டீ விற்று வந்தார். தினமும் தெருவாக அலைந்து திருந்து டீ விற்கும் பணத்தில் தான், அவரது குடும்பமும் பசியாறி வந்ததாகக் கூறப்படுகிறது. 

இப்படி வருமையின் பிடியில் இருந்த பாலசுப்ரமணியனிடம் தான், அடங்க முடியாத காம வெறியும் இருந்துள்ளது.  

அதாவது பாலசுப்ரமணியன் வீட்டின் எதிர் வீட்டில் உள்ள 6 வயது குழந்தையின் மேல், பாலசுப்ரமணியத்திற்கு காம பார்வை விழுந்துள்ளது. குழந்தை என்று கூட தெரியாத அளவுக்கு பாலசுப்ரமணியத்திற்கு காமம் எட்டிப் பார்த்துள்ளது. இதனால், அவர் சந்தர்ப்பத்திற்காகவும் காத்திருந்துள்ளார்.

இதனால், அந்த சிறுமி எப்போதெல்லாம் பாலசுப்ரமணியத்தின் வீட்டிற்கு விளையாட வருகிறதோ, அப்பொழுதெல்லாம் பாலசுப்ரமணியம் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து டார்ச்சர் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டுக்கு எதிர் வீட்டைச் சேர்ந்த அந்த 6 வயது சிறுமியும், 8 வயது சிறுவனும் பாலசுப்ரமணியன் வீட்டில் வந்து விளையாடி உள்ளனர். அப்போது, பாலசுப்ரமணியம் வீட்டிலும் யாரும் இல்லாத நிலையில், அந்த 6 வயது சிறுமிக்கும், அந்த 8 வயது சிறுவனுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், வலி தாங்க முடியாமல் அழுதுகொண்டே இருவரும் வீடு திரும்பி உள்ளனர். அங்கு, “ஏன் அழுகிறீர்கள்?” என்று அவர்களது பெற்றோர் கேட்டுள்ளனர். அதற்கு, பாலசுப்ரமணியன் தங்கள் உடல் மீது செய்த டார்ச்சர் குறித்துக் கூறி உள்ளனர். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த குழந்தைகளின் தாய் அமீனா பேகம், அங்குள்ள திருப்பரங்குன்றம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பாலசுப்ரமணியனை அதிரடியாகக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன் பிறகு, போக்சோ சட்டத்தின் கீழ் அவரை சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, மதுரையில் கொரோனா வைரஸ் தொற்று சற்று அதிகரித்துக் காணப்படும் வரும் நிலையில், சிறுவர் சிறுமிகளுக்கு எதிரான இப்படி ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது, மதுரை மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.