42 வயது கள்ளக் காதலி ஒருவர், தனது 24 வயது கள்ளக் காதலனை கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம், கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கொடைக்கானல் அன்னை தெரசா நகர் பகுதியில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கொடைக்கானல் அன்னை தெரசா நகர் பகுதியைச் சேர்ந்த 24 வயது பிரதீப் என்ற இளைஞர், அந்த பகுதியில் டிரைவராகவும், சுற்றுலா வழிகாட்டியாகவும் பணியாற்றி வருகிறார். 

அதே நேரத்தில், பிரதீப் வீட்டின் அருகே 42 வயதான பிரமிளா என்ற பெண், கடந்த 6 வருடங்களுக்கு முன்பு தனது கணவனை இழந்த நிலையில், அங்கு  தனியாக வசித்து வந்தார். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், 24 வயது பிரதீப், பக்கத்து வீட்டில் தனிமையில் இருக்கும் 42 வயதான பிரமிளாவுக்கு அவ்வப்போது உதவி செய்து வந்து உள்ளார்.

இந்த பழக்கம், நாளடைவில் அவர்கள் இருவருக்குள்ளும் வயது வித்தியாசம் இன்றி, முதலில் நட்பான பழக்கமாக ஏற்பட்டு உள்ளது. இப்படியே, நட்பான பழக்கம் சில காலம் சென்ற நிலையில், அதன் தொடர்ச்சியாக இருவருக்கும் சுமார் 20 வயது வித்திசாயம் இருந்தும் அவர்களுக்குள் அந்த நட்பு, காதலாக மாறி உள்ளது. 

அதன் தொடர்ச்சியாக, ஒருவரை ஒருவர் காதலை அவர்களுக்குள் வெளிப்படுத்திக்கொண்ட நிலையில், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு, கடந்த சில வருடங்களாக அவர்கள் இருவரும் கணவன் - மனைவியாகவே அந்த வீட்டில் உல்லாசமான ஒரு வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்த சூழ்நிலையில் தான், பிரதீபுக்கு அவர்களது பெற்றோர்கள், பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இந்த தகவலை, பிரதீப் தனது கள்ளக் காதலியான பிரமிளாவிடம் கூறி உள்ளார். 

இதனால், கடும் அதிர்சியடைந்த கள்ளக் காதலி பிரமிளா, காதலன் பிரதீப்பின் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டம் செய்து உள்ளார். அது மட்டும் இல்லாமல், “நீ இத்தனை நாட்கள் என்னுடன் குடும்பம் நடத்திவிட்டு, இப்போது இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய நான் அனுமதிக்க மாட்டேன் என்று கூறிய அந்த காதலி, நீ திருமணம் செய்வதாக இருந்தால் என்னை மட்டும் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என்றும், அந்த பெண் பிரச்சனை செய்து உள்ளார்.

ஆனால், இதற்கு பிரதீப் எந்த பதிலும் சொல்லாமல் அப்படியே அமைதியாக இருந்து உள்ளார். அதன் பின்னர், அவர்கள் இருவரும் எப்போதும் போல், தீபாவளி தினத்தன்று இருவரும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி உள்ளனர். அதன் தொடர்ச்சியாக, அன்று இரவு அந்த கள்ளக் காதல் ஜோடிகளுக்குள், மீண்டும் திருமணம் தொடர்பாகப் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. இதில் கடும் ஆத்திரம் அடைந்த கள்ளக் காதலி பிரமிளா, ஒரு கட்டத்தில் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து பிரதீப்பின் மார்பிலும், தலை பகுதியிலும் சரமாரியாகக் குத்தி உள்ளார். இதனால், பிரதீப் அலறி துடித்து உள்ளார். பிரதீப்பின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், ஓடி வந்து பிரதீப்பை பார்த்து உள்ளனர். அப்போது, அந்த இளைஞர் ரத்த வெள்ளத்தில் அங்கே சரிந்து கீழே விழுந்து கிடந்து உள்ளார். 

அவரைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவரை மீட்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, பிரதீப்புக்கு தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

ஆனால், அதன் தொடர்ச்சியாக, அந்த இளைஞர், உயர் சிகிச்சைக்காகக் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் இருந்து தேனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

மேலும், இது தொடர்பாக பிரதீப்பின் தாயார் ரூபி ஸ்டெல்லா, கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கள்ளக் காதலனை கத்தியால் குத்திய கள்ளக் காதலி பிரமிளாவை அதிரடியாக கைது செய்து, விசாரித்து வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.