நாசாவின் விண்கலனை வழிநடத்தி, செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பிய இந்திய பெண்!

நாசாவின் விண்கலனை வழிநடத்தி, செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பிய இந்திய பெண்! - Daily news

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் பல்வேறு துறைகளில் தொடர்ந்து சாதித்து வருகிறார்கள். அதன் தொடர்ச்சியில்,  இந்தியாவைச் சேர்ந்த ஸ்வாதி மோகன் என்கிற பெண், 'பெர்சிவியரன்ஸ் ரோவர்' விண்கலத்தின் விண்வெளிப் பயணத்தைத் வெற்றிகரமாக வழிநடத்தி செவ்வாயில் தரையிறங்க வைத்திருக்கிறார். ஸ்வாதிமோகனின் இந்த செயலை நாடே கொண்டாடி வருகிறது.


அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம், மார்ஸ் 2020 என்கிற திட்டத்தின் கீழ் செவ்வாய்க்கு அனுப்பியிருக்கும்  விண்கலமான  'பெர்சிவியரன்ஸ் ரோவர்' பூமியிலிருந்து பயணத்தை தொடங்கி, சரியான பாதையில் பயணித்து செவ்வாய்க்கிரத்தில் இறங்குவது வரை துல்லியமாக கண்காணித்து கையாள வேண்டிய பொறுப்பு ஸ்வாதியுடையது. 


இதுவரை செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட விண்கலங்களில் வெறும் 40% விண்கலங்கள் மட்டும் தான் வெற்றிகரமான தரையில் இறங்கியுள்ளது. வெவ்வாய் கிரகத்தில் காணப்படும் ஜெஸிரோ கிரேட்டர் பள்ளத்தில், ஏரி இருப்பதால் அந்த பகுதியில் உயிரனங்கள் வாழ்ந்ததற்கான தடையங்கள் உள்ளனவா என்பதை கண்டறிவதற்காகவே, ரோவர் விண்கலம் செவ்வாய்க்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த பள்ளத்தில் தான் விண்கலம் ஆய்வு மேற்கொள்ள வேண்டியிருப்பதால், மிகுந்த சவாலான பள்ளத்தில் வெற்றிகரமாக விண்கலத்தில் தரையிறக்கி செயல்பட வைத்திருக்கிறார் ஸ்வாதி. இந்திய கலாசாரத்துடன் நாசாவின் கட்டுப்பாட்டு அறையில் அமர்ந்துக்கொண்டு விண்வெளியின் வேற்றுகிரகம் வரை சாதனை படைத்துள்ளார் என்று நெடிசன்கள் ஸ்வாதியை கொண்டாடி வருகிறார்கள். 

Leave a Comment