11 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு, ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

நீலகிரி மாவட்டம் கூடலூர் கோத்தர்வயல் பகுதியைச் சேர்ந்த 44 வயதான அப்துல் நாசர், தனது மனைவி உடன் வசித்து வந்தார். இந்த தம்பதிக்கு 11 வயதில் ஒரு பெண் பிள்ளையும், ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர். அப்துல் நாசர், அந்த பகுதியில் துணி வியாபாரம் செய்து வந்தார்.

இப்படியான சூழ்நிலையில், எந்த தந்தையும் நினைக்காத வகையில், தன் மகள் மீது தந்தையான அப்துல் நாசர், சபலப்பட்டு உள்ளார். இந்த சபல புத்தியானது, மகள் என்றும் பார்க்காமல், அந்த 11 வயது சிறுமி மீது பாய்ந்திருக்கிறது.

இதனால், வீட்டில் தனது மனைவி மற்றும் ஆண் பிள்ளை என்று யாரும் இல்லாத நேரத்தில், மகள் மட்டும் தனியாக இருந்து உள்ளார்.

அப்போது, 44 வயதான தந்தை அப்துல் நாசர், தனது 11 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இப்படியாக, கடந்த 3 ஆண்டு காலமாக இந்த பாலியல் பலாத்கார சம்பவத்தை, அவர் தனது வீட்டிலேயே நடத்தி வந்திருக்கிறார்.

அத்துடன், “இந்த பாலியல் பலாத்காரம் குறித்து, அம்மாவிடமோ நம் உறவினர்கள் என்று, யாரிடமாவது நீ சொன்னால், உன்னை அன்றே கொன்று புதைத்து விடுவேன்” என்று, தந்தை மிக கடுமையாக மிரட்டி இருக்கிறார்.

இதனால், பயந்து போன அந்த 11 வயது சிறுமி, தன் தந்தையின் தொடர்ச்சியான பாலியல் பலாத்காரம் பற்றி, அம்மா உட்பட யாரிடமும் எதுவும் சொல்லாமல் பயத்திலேயே இருந்திருக்கிறார். அப்போது, இது தான் நல்ல தருணம் என்று, மகளின் பயத்தை வைத்தே, அந்த தந்தை தன் மகளை தொடர்ச்சியாக 3 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

இப்படியான சூழ்நிலையில் தான், சிறுமியின் தாய் வழி தாத்தா வீடு கேரளாவில் உள்ளதால், அங்கு அந்த சிறுமி சென்று உள்ளார்.

அப்போது, கேரளாவில் இருந்து தன் மகளை அனுப்பி வைக்குமாறு, சிறுமியின் அப்பா, தனது மாமனாரிடம் கூறியிருக்கிறார். இதனால், “நீ ஊருக்கு போ” என்று, சிறுமியிடம் அந்த தாத்தா கூறியிருக்கிறார்.

“அப்படி, நாம் வீட்டிற்குச் சென்றால், அங்கு தந்தையால் நரக வேதனை அனுபவிக்க வேண்டும் என்று, பயந்துபோன அந்த சிறுமி, தனது தாத்தாவிடம் தந்தையால் தனக்கு தொடர்ந்து நேர்ந்து கொண்டு இருக்கும் பாலியல் பலாத்காரம்” பற்றி கூறி அழுதுள்ளார்.

இதனைக் கேட்ட அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து, உடனடியாக கேரளாவில் உள்ள மருத்துவமனைக்குச் சிறுமியை கூட்டிச் சென்று, சிறுமிக்கு 
மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

அப்போது, சிறுமியின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் முதல் சிறுமியின் தாத்தா வரை கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து, சிறுமியின் தந்தை, தனது மகளை தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்து வந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

கடந்த 2017 ஆம் நடந்து இந்த சபம்பவத்தில், அதன் தொடர்ச்சியாக அன்றே கூடலூர் அனைத்து காவல் நிலையத்தில் சிறுமி புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மீனா குமாரி, சிறுமியின் தந்தை மீது வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். 

இந்த விசாரணையில் சிறுமியின் தந்தை குற்றத்தை ஒப்புக் கொண்டார். அதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கு உதகை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

தற்போது, இந்த வழக்கில் அனைத்து தரப்பு விசாரணையும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

அதன் படி, இந்த வழக்கில் தீர்ப்பு கூறிய மகிளா நீதிமன்ற நீதிபதி, “சிறுமியை தன் மகள் என்று பார்க்காமல் தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக, குற்றவாளியான தந்தை அப்துல் நாசருக்கு ஆயுள் தண்டனையும், 10 லட்சம் அபராதம் விதித்து அதிரடியாகத் தீர்ப்பு வழங்கினார். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.