சென்னையிலிருந்த தண்ணீர் பிரச்னையை தீர்த்து வைத்தது அதிமுக - எடப்பாடி பழனிசாமி

சென்னையிலிருந்த தண்ணீர் பிரச்னையை தீர்த்து வைத்தது அதிமுக - எடப்பாடி பழனிசாமி - Daily news

மாதவரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மாதவரம், ஆவடி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ‘’கல்விலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. உயர் கல்வியில் 149 பேர் பயின்று வருகின்றனர். நீட் தேர்வு மற்றும் மருத்துவ படிப்பில் 435 பேர் தேர்ச்சி பெற்று மருத்துவராக பணியில் உள்ளனர்.


சென்னையிலிருந்த தண்ணீர் பிரச்னையை தீர்த்து வைத்தது அதிமுக அரசு.செம்பரம்பாக்கம் ஏரி நீரை சேமித்துள்ளோம். பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் சென்னையை மேம்படுத்தியுள்ளோம். இப்படி திமுக அவர்கள் ஆட்சியில் செய்ததை கூறி பிரச்சாரம் செய்கிறார்களா பாருங்கள். அதிமுக-வை குறை கூற மட்டுமே பிரச்சாரம் செய்கிறார்கள். நல்ல எண்ணம் என்பதே ஸ்டாலினுக்கு கிடையாது.” என்றார்.


மேலும் பிரச்சாரத்தின் போது  மாதவரம் குடியிருப்போர் நல சங்கங்களில் கூட்டமைப்பு தலைவர் நீல கண்ணன் தலைமையில் நிர்வாகிகள் இஸ்லாமியர்களுக்கு இடுகாடு அமைத்து தரவேண்டும், ரெட்டேரியை தூர்வாரி சுற்றுலா தளமாக்க வேண்டும், தட்டாங்குளம் சாலை அருகே ஜிஎன்டி சாலையில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வரிடம் கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் உங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார். 

Leave a Comment