கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட டிரைவிங் லைசென்ஸ் வழங்கும் பணி இரண்டு வாரஙக்ளுக்கு முன்பு தொடங்கப்பட்டிருந்தது.

குறிப்பாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வழங்கப்பட்டு வந்த பழகுநர், ஓட்டுனர், கனரக ஓட்டுநர் உரிமங்கள், பேட்ஜ் உள்ளிட்ட அனைத்தும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி சில வாரங்களுக்கு முன் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் பழகுநர் உரிமம் மட்டும் வழங்கினர். தற்போது ஓட்டுநர், கனரக ஓட்டுநர், பேட்ஜ் உட்பட அனைத்தும் வழங்கப்பட்டு வந்தது.

தினமும் 12 பேருக்கு மட்டுமே ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். 2020 ஜன., ல் முடிந்த ஓட்டுநர் உரிமம், வாகன பெர்மிட், வரிகள் கட்டி புதுப்பிக்கப்படும் பணிகளுக்கு செப்., 30 வரை கால அவகாசம் வழங்கியுள்னர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்களை அதிகமாகக் கூடுவதை தவிர்க்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் ஆகஸ்டு 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

அந்த வகையில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்களை புதுப்பிக்கும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. ஆகவே, தங்களின் ஆவணங்களை புதுப்பிக்க முடியாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.

எனவே, பிப்.,1ம் தேதிக்கு பிறகு காலவதியாகும் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களின் செல்லுபடி காலம் செப்.,30ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்தது. காலாவதியான ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்களின் செல்லுபடி காலத்தை மேலும் நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆனால், கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து காணப்படுவதால், ஓட்டுநர் உரிமம், வாகனங்களின் ஆவணங்களை புதுப்பிக்கும் காலத்தை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டித்து மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த உத்தரவினால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

கொரோனா வைரசால் ஏற்பட்ட அசாதாரண சூழலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், லைசென்ஸ் மற்றும் வாகன ஆவணங்களின் செல்லத்தக்க காலம் நீட்டிக்கப்பட்டு உள்ளது என சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.