டெல்லியில் 55 வயது முதியவர் ஒருவர், “உங்க 13 வயசு பொண்ண பிடிச்சிருக்கு.. எனக்கு கல்யாணம் பண்ணித் தாங்க” என்று, அவரது பெற்றோரிடம் கேட்ட சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாடே கொரோனா என்னும் பெருந்தொற்றால், சிக்கித் தவித்து வருகிறது. இப்படிப்பட்ட இந்த இக்காட்டான நிலையிலும் கூட, தன்னுடைய காமத்தை வெளிக்காட்டி, பேத்தி வயது இருக்கும் சிறுமியைக் கல்யாணம் பண்ணித்தரச் சொல்லி முதியவர் ஒருவர் கேட்ட சம்பவம், பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் உள்ள நரோலா என்னும் பகுதியைச் சேர்ந்த 55 வயதான அர்ஜுன் சிங், அந்த பகுதியில் கட்டிட காண்ட்ராக்டராக பணி புரிந்து வருகிறார். 55 வயதான அர்ஜுன் சிங்கிற்கு ஏற்கனவே திருமணமான நிலையில், அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 

இந்நிலையில், காண்ட்ராக்டர் அர்ஜுன் சிங், அப்பகுதியில் ஒரு இடத்தில், வீடு கட்டுவது தொடர்பாக கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்தார். அங்கு, அர்ஜுன் சிங்கிடம் பல பெண்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, வருமையின் காரணமாக, அந்த பகுதியசைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவரும் பணிபுரிந்து வந்தார்.

அந்த சிறுமியை பார்த்ததும் 55 வயதான அர்ஜுன் சிங், காம வயப்பட்டதாகத் தெரிகிறது. இதனையடுத்து, அந்த சிறுமியை பார்ப்பதற்காகவே, கட்டுமான பணி நடைபெறும் இடத்திற்கு அர்ஜுன் சிங் அடிக்கடி வந்து சென்றதாகவும் தெரிகிறது.

இதனையடுத்து, பல முறை யோசித்துப் பார்த்த அர்ஜுன் சிங், நேராக சிறுமியின் பெற்றோரைச் சந்தித்து “உங்கள் 13 வயது சிறுமியை எனக்குப் பிடித்திருக்கிறது. அதனால், உங்கள் பொண்ண எனக்குத் திருமணம் செய்து தாருங்கள்” என்று கேட்டுள்ளார். 

இதைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை, அர்ஜுன் சிங்கை கடுமையாகத் திட்டி எச்சரித்து அனுப்பி உள்ளார். ஆனாலும், சிறுமியின் மீதானஆசையால், அர்ஜுன் சிங் பலர் மூலம் சிறுமியின் பெற்றோரிடம் தூது விட்டுள்ளார்.

அதன்படி, சிறுமியின் உறவினர் ஒருவரிடம் இது குறித்து அர்ஜுன் சிங் பேசியுள்ளார். அப்போது, “கல்யாணத்திற்குச் சிறுமியின் பெற்றோரை சம்மதிக்க வைத்தால், சிறுமியின் குடும்பத்திற்கும், உங்களுக்கும் பண உதவிகள் செய்கிறேன்” என்றும், ஆசை வார்த்தைகள் கூறி உள்ளார். 

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் உறவினர், “உங்கள் வயது என்ன?, சிறுமியின் வயது என்ன?” என்று, அர்ஜுன் சிங்கை சரமாரியாகக் கேள்வி கேட்டு அசிங்கப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், கடும் ஆத்திரமடைந்த அர்ஜுன் சிங், அங்குக் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து அந்த சிறுமியின் உறவினரைக் கடுமையாகத் தாக்கி உள்ளார்.

இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து, அங்கிருந்து அர்ஜுன் சிங் தப்பித்து ஓடி உள்ளார். இது குறித்து விரைந்து வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள அர்ஜுன் சிங்கை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.