கூட்டம் சேரவில்லை என்பதை திசை திருப்ப பாஜகவே அவர்கள் மீது கற்கள் வீசிக்கொள்கிறார்கள்!- மம்தா பானர்ஜி

கூட்டம் சேரவில்லை என்பதை திசை திருப்ப பாஜகவே அவர்கள் மீது கற்கள் வீசிக்கொள்கிறார்கள்!- மம்தா பானர்ஜி - Daily news

மேற்கு வங்கத்தில் உள்ள டைமண்ட் ஹார்பர் பகுதியில் பாஜக சார்பில் பொது க் கூட்டத்தில் பங்கேற்க, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா காரில் சென்றுக்கொண்டு இருந்தார். அப்போது ஜே.பி.நட்டாவின் பாதுகாப்பு வாகனம் கண்ணாடி மீது கற்கள் வீசப்பட்டன.


இந்த சம்பவத்துக்கு பின்பு , “ பாஜகவின் மூத்த தலைவர் ஒருவருக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் நிலையை நினைத்துப்பாருங்கள். இதற்குமுன் இதுப்போன்று எப்போதும் நடந்தில்லை. மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது சட்டம் ஒழுங்கும் இல்லை, குண்டர்கள் ஆட்சி நடக்கிறது என்று குற்றம்சாட்டினார் ஜே.பி.நட்டா. 


" பேரணிக்குக் கூட்டம் சேரவில்லை என்பதை இவ்வாறு பாஜக திசை திருப்புகிறது. அவர்களே தான் அவர்கள் கார் மீது கற்கள் வீசி உள்ளார்.  சிஐஎஸ்எப், சிஆர்பிஎப், பிஎஸ்எப் போன்ற மத்திய படைகள் பாதுகாப்புக்கு இருக்கின்றன. மேற்கு வங்க மாநிலத்தில் பலருக்கும் மாநில அரசுக்கே தெரியாமல் மத்திய படை பாதுகாப்பு அளிக்கிறது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு விவகாரம் என்பது மாநில அரசுக்கு உட்பட்டது. ஆனால், தொடர்ந்து அதில் மத்திய அரசு தலையிடுகிறது. ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், தொடர்ந்து மாநில அரசைத்தான் குற்றம் சாட்டுகிறார்கள்” மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். 

இந்நிலையில், வங்காள ஆளுநர் தங்கர்,’’ ஜே.பி. நட்டா நடந்த சம்பவத்துக்கு வெட்கப்படுகிறேன். அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. முதல்வர் மம்தா பானர்ஜி அவரின் வார்த்தைகளை திரும்ப பெற வேண்டும். கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும். அரசியல் சித்தாந்தங்களுக்கும் அறிக்கைகளுக்கும் ஒரு எல்லை உண்டு. அதை மீறக்கூடாது. மேற்கு வங்க முதல்வர், தயவுசெய்து நெருப்புடன் விளையாட வேண்டாம்” எனக் கூறியுள்ளார். 


டைமண்ட் ஹார்பர் தொகுதி எம்.பி.யாக முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினர் அபிஷேக் பானர்ஜி இருக்கிறார். அதனால் இந்த சம்பவத்தை நடத்தியது மம்தா பானர்ஜி தரப்பு தான் என்று  பாஜக தரப்பு சொல்லி வருகிறது. 

Leave a Comment