கோயம்புத்தூரில் உல்லாசத்தில் ஈடுபட்ட போது கள்ளக் காதலர்கள், தங்களது உறவினர்களிடம் கையும் களவுமாக பிடிபட்டதால், அவமானம் அடைந்த கள்ளக் காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பள்ள பாளையம் நஞ்சப்பத் தேவர் நகரைச் சேர்ந்த அசோகன் மகன் 23 வயதான கிருஷ்ணகுமார், அந்த பகுதியில் தனியார் பேருந்தில் நடத்துநராக பணியாற்றி வந்தார்.

இதனிடையே, கிருஷ்ணகுமார் அங்குள்ள பள்ள பாளையம் பாலாஜி நகரைச் சேர்ந்த தனது நண்பன் மணிகண்டன் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.அப்போது, மணிகண்டனுக்கு செந்தமான வீட்டின் ஒரு பகுதியை அவர் வாடகைக்கு விட்டிருந்தார். அந்த வாடகை விட்டில், மகாலிங்கம் என்பவர் தனது மனைவி ரங்க நாயகியுடன் வசித்து வந்தார். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், மணிகண்டன் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் கிருஷ்ணகுமாருக்கும், மணிகண்டன் வீட்டில் குடியிருக்கும் மகாலிங்கத்தின் மனைவி ரங்க நாயகிக்கும் இடையே, கள்ளக் காதல் மலர்ந்து உள்ளது. இதனால், மகாலிங்கம் வீட்டில் இல்லாத நிலையில் அங்கு வரும் கிருஷ்ணகுமார், ரங்க நாயகி உடன் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்றும் அவர் எப்போதும் போல் ரங்க நாயகி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, அவரது கணவர் வீட்டில் இல்லாத நிலையில், கள்ளக் காதலர்கள் இருவரும் உல்லாச இன்பத்தில் ஈடுபட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த ரங்கநாயகியின் உறவினர்கள், அந்த வீட்டை வெளிப்புறமாகப் பூட்டி உள்ளனர். எனினும், அடுத்த சிறிது நேரத்தில், ரங்க நாயகி வெளியே வந்து உள்ளார். ஆனால், கிருஷ்ணகுமார் மட்டும் வீட்டிற்குள் சிக்கிக் கொண்டதாகத் தெரிகிறது. 

இதனையடுத்து, சிறிது நேரத்தில் கிருஷ்ணகுமாரின் நண்பன் மணிகண்டன் உட்பட அக்கம் பக்கத்தினர் கூடிய நிலையில், பூட்டிய வீட்டைத் திறந்து உள்ளனர். 

அப்போது, கள்ளக் காதலால் தான் மாட்டிக்கொண்டதை உணர்ந்து கடும் அவமானம் அடைந்த  கிருஷ்ணகுமார், அந்த வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. 

கதவைத் திறந்து பார்த்த போது, கிருஷ்ணகுமார் நிர்வாணமான நிலையில் தூக்கில் சடலமாகத் தொங்கி உள்ளார். இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

இது குறித்து விரைந்து வந்த போலீசார், தற்கொலை செய்துகொண்ட கிருஷ்ணகுமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் தான், அவரது கள்ளக் காதல் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.