பரமக்குடியில் ஏற்கனவே திருமணமான இளைஞர் ஒருவர் 10 ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததில், சிறுமி தற்போது 9 மாத கர்ப்பம் அடைந்துள்ள சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கிறிஸ்தவ தெருவைச் சேர்ந்தவர் 27 வயதான ஸ்டீபன் ராஜ், கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருணம் ஆன நிலையில், தற்போது அவருக்கு ஒரு குழந்தை உள்ளது. ஸ்டீபன் ராஜ், அந்த பகுதியில் ஓட்டுநராக உள்ள நிலையில், அந்த பகுதியில் வாடகைக்கு கார் ஓட்டி வருகிறார்.

இதனிடையே ஸ்டீபன் ராஜ், அதே பகுதியைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் அறிமுகம் ஆகி உள்ளார். மாணவி, அவருடன் நல்ல முறையில் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.

ஒரு கட்டத்திற்கு மேல், அந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி மீது சபலப்பட்ட  ஸ்டீபன் ராஜ், அந்த சிறுமியை மிரட்டியே பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். 

அத்துடன், சிறுமியை தான் நினைக்கும் போதெல்லாம் தொடர்ந்து அவன் மிரட்டி பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்து உள்ளான். 
  
மேலும், சிறுமி உடன் ஒன்றாக இருக்கும் ஆபாசமான புகைப்படங்களைத் தனது செல்போனில் எடுத்து வைத்துக்கொண்டு, அந்த மாணவியை மிரட்டி காரில் பல வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்று உல்லாசம் அனுபவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 

இதனால், மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார். நாளாக நாளாக சிறுமியின் வயிறும் பெரிதாகி உள்ளது. இதனால், சிறுமியின் உடலில் நாளுக்கு நாள் பல மாற்றங்கள் நிகழ்ந்து உள்ளன.  

இதனை கவனித்த சிறுமியின் பெற்றோர், சந்தேகம் அடைந்து சிறுமியிடம் விசாரித்து உள்ளனர். அப்போது, அவர் சரிவர பதில் அளிக்க வில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, சிறுமியை அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்துள்ளனர்.

அங்கு, ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளைச் செய்த மருத்துவர்கள், சிறுமி தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் கழுது கதறி உள்ளனர். இதனையடுத்து, சிறுமியிடம் அவரது பெற்றோர் விசாரித்து உள்ளனர். 

அப்போது, ஸ்டீபன் ராஜ் தன்னை மிரட்டி மிரட்டியே தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்ததைக் கூறி கதறி உள்ளார்.

இதனையடுத்து, சம்மந்தப்பட்ட ஸ்டீபன் ராஜிடம் சென்று கேட்டபோது, அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது தெரிய வந்தது. மேலும், சிறுமியின் பெற்றோரை தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு, அவர்களுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளான். இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், சிறுமி உடன் சென்று பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ஸ்டீபன்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்குப் பிறகு, அவனைச் சிறையில் அடைத்தனர். இதன் காரணமாக, சிறுமியின் வாழ்க்கை தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.