முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாய பயிர் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுவதாக சட்டமன்றத்தில் இன்று அறிவித்துள்ளார்.


தமிழகத்தில் ஜனவரி மாத மழை , புயல் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளின் கடன் சுமையை நீக்கிடும் விதமாக, 12,110 கோடி கூட்டறவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 


சட்டபேரவை 110 விதி கீழ், கூட்டுறவு வங்கியில் இருக்கும் விவசாயிகளின் கடன் 12,110 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் இன்று அறிவித்துள்ளார். இந்த கூட்டுறவு கடன் தள்ளுபடியால் 16.43 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றுள்ளார். 


இதுக்குறித்து அவர் கூறியது, ‘’ விவசாயிகள் படும் துயரங்களை நான் நன்கு அறிவேன். நிரவி மற்றும் புரவி புயல்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏற்பட்ட கடன் நஷ்டத்தை நீக்கும் விதமாகவும், இடு பொருள் நிவாரணம் அறிவித்து அதனை ஏக்கருக்கான உச்சபட்ச அளவையும் நீக்கியது அதிமுக அரசு தான். விவசாய கடனை இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்த ஒரே அரசு அதிமுக தான். ” என்றுள்ளார்.