திமுக தலைவர் மு.க,ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார்.


மு.க.ஸ்டாலின் அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்டதில் இருந்து அவர் சந்தித்த தேர்தல்களில் ஆயிரம்விளக்கு தொகுதியில் அதிகமாக போட்டியிட்டுள்ளார்.அதே  வேளையில் அங்கு வெற்றி, தோல்வி என இரண்டையும் சந்தித்தும் உள்ளார்.இந்தநிலையில் 2011 மற்றும் 2016 -களில்  கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின் தொடர்ந்து இரண்டு முறையும் வெற்றி வாகையை சூடினார்.இந்தநிலையில் மீண்டும் 2021 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூரில் களம் இறங்குகிறார்.அதற்கான வேட்புமனுவையும் இன்று தாக்கல் செய்தார்.


இதனைத் தொடர்ந்து வேட்மனுவில் குறிப்பிட்டுள்ள அவரின்  சொத்து விபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

2011 ஆம் ஆண்டு அவரின் சொத்து விபரம்  19 லட்சத்து 23 ஆயிரத்து 833 ரூபாய் அசையும் சொத்தாகவும்,  அசையா சொத்துக்கள் மதிப்பு 92 லட்சத்து 87 ஆயிரத்து 833 ரூபாயாக உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 

அதன் பிறகு 2016  சட்டமன்ற தேர்தலில் திமுக பொருளாளர் மு.க.,ஸ்டாலினின் சொத்து கிட்டதட்ட 4 கோடியே 72 லட்சத்து 83 ஆயிரத்து 988 ரூபாயாக இருந்துள்ளது.அதில் அசையும் சொத்துக்களின் மதிப்பு 1 கோடியே  11 லட்சத்து 59 ஆயிரத்து 079 ரூபாயாக இருந்துள்ளது. அசையா சொத்துக்களின் மதிப்பு 3 கோடியே 33 லட்சத்து 50 ஆயிரத்து 746 ரூபாயாக இருந்துள்ளது. 

இம்முறை 2021 அவரின் மொத்த சொத்து மதிப்பில் அசையும் சொத்தின் மதிப்பு ரூ .5 கோடியே 94 கட்சத்து 84 ஆயிரம் உள்ளது என்றும்,  அசையா சொத்துக்களின் மதிப்பு  ரூ.3 கோடியே 63 லட்சத்து 37 ஆயிரமாக  இருப்பதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது மனைவி துர்கா ஸ்டாலின் பெயரில்  ரூ 50 லட்சம் மதிப்பிலான அசையும், அசையா சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இதில் 750 சவரன் தங்க நகைகள் இருப்பதாகவும், தன்னிடம் எந்த தங்க நகையும் இல்லை எனவும் தெரித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு சொத்து மதிப்பின் கணக்கைவிட இந்தமுறை  4  கோடி ரூபாய் அளவிற்கு  அதிகரித்துள்ளது அவரது வேட்புமனு தாக்கல் மூலம் தெரியவந்துள்ளது.

2016 ஆம் ஆண்டு கணக்கோடு ஒப்பிடுகையில் இம்முறை அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.1 கோடி அளவிற்கு சரிந்துள்ளது.ஆனால் அசையும் சொத்துக்களின் மதிப்பு  4 கோடியே 13 லட்சம் வரை உயர்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இதுமட்டுமின்றி மு.க.ஸ்டாலினின் மகனும், நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு கிட்டதட்ட ஸ்டாலினின் தற்போதைய சொத்து மதிப்பை விட பல மடங்கு அதிகரித்து காணப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில்தான் முதல் மூறையாக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது....