ஃபேஸ்புக்கில் காதல் வலை விரித்த மோசடி கும்பல் ஒன்று, பணம் கேட்டு மிரட்ட தொடங்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கேரளா மாநிலம் கும்பேளத்தைச் இளைஞர் ஒருவர் கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த பெண்ணிற்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 
  
இந்த பழக்கம் போகப் போக மிக நெருக்கமாகி காதலாக மாறி உள்ளது. இந்த சமயத்தில், அந்த இளைஞனால் அந்த பெண்ணை பார்க்காமல் இருக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, உடனே அந்த பெண்ணைத் தேடி மங்களூரு வந்துள்ளார். 

அதன் பிறகு, மங்களூரு வந்த இளைஞர் அந்தப் பெண்ணை சந்தித்துப் பேசி உள்ளார். 

அப்போது, அந்த பெண்ணின் பெயர் ஜீனத் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து, ஜீனத் தான் வந்த காரில் அந்த இளைஞனை தனது சொந்த வீட்டிற்கு அழைத்துச் சென்று இருக்கிறார். 

அந்த தருணத்தில், மிகுந்த சந்தோசத்தில் இருந்த அந்த இளைஞனுக்கு அங்கு என்ன நடக்கும் என்பது தெரியாமல், காதலில் மயங்கி இருந்து உள்ளார்.

அதன்படி, அவரது வீட்டிற்குச் சென்றதும், திடீரென்று ஜீனத் மற்றும் அவரது கணவர் உள்பட 4 பேர் சேர்ந்து, அவனை அடித்து உதைத்து அந்த இளைஞனின் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாய் புகைப்படத்தை எடுத்து உள்ளனர். 

மேலும்,  அடுத்த கட்டமாக அந்த கும்பல் தாங்கள் எடுத்த அந்த புகைப்படத்தைக் காட்டி அந்த இளைஞனை மிரட்டி 5 லட்சம் ரூபாயை கேட்டு பகிரங்கமாக மிரட்டி உள்ளது. 
      
ஆனால், சுதாரித்துக் கொண்ட அந்த இளைஞன், “தற்போது என்னிடம் அவ்வளவு பணம் இல்லை இப்போதைக்கு தன்னிடம் முப்பதாயிரம் ரூபாய் தான் இருக்கு என்றும், கொஞ்ச நாள் டைம் கொடுங்க எப்படியாவது மொத்த ரூபாயையும் ஏற்பாடு செய்து கொடுத்து விடுகிறேன்” என்று கூறிவிட், அந்த இடத்திலிருந்து சாமர்த்தியமாகத் தப்பித்து வந்து உள்ளார்.

அத்துடன், அங்கிருந்து தனது சாமர்த்தியத்தால் தப்பித்து வந்த அந்த இளைஞர், உடனடியாக காவல் நிலையத்தில், தனக்கு நடைபெற்ற சம்பவம் பற்றி புகார் அளித்து உள்ளார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த சுர்தகால் காவல் துறையினர், கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த ரட்கலின் ரேஷ்மா என்ற நீமா, ஜீனத் என்ற ஜீனத் முபீன், அவரது கணவர் இக்பால் முகமது என்ற இக்பால், நசிப் என்ற அப்துல் காதர் நஜீப் ஆகிய 4 பேரையும் கைது செய்துள்ளதாக, காவல் ஆணையர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.

முக்கியமாக, வசமாக மாட்டிக்கொண்ட அந்த கும்பளைப் பற்றி விசாரணை செய்ததில், “இந்த கும்பல் இது போன்று தொடர்ந்து பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டது” தெரிய வந்தது. 

“இது போன்று, காதல் வார்த்தைகளைக் கூறி ஆசையைத் தூண்டும் விதமாக நடித்துப் பல இளைஞர்களை தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து மிரட்டி பணம் பறித்துள்ளனர் என்றும் இது வரை 6 இளைஞர்களை மிரட்டி பணம் பறித்துள்ளது சம்பவம்” தற்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.