மகாராஷ்டிராவில் கொரோனா தனிமை மையத்தில் இருந்த இளம் பெண்ணை, மத்துவமனை ஊழியர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் 27 வயதான ஆண் உதவியாளர் ஒருவர், அங்கே பணியாற்றி வந்தார்.

அப்போது, கடந்த ஜூன் மாதம் தானேவில் மீரா பகுதியில் உள்ள கொரோனா தனிமை மையத்தில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 11 வயது உடைய  சிறுவன் ஒருவன், அந்த தனிமை மையத்தில் அனுமதிக்கப்பட்டான்.

அப்போது, அந்த 11 வயது சிறுவனை கவனித்துக்கொள்ளவதற்காக இளம் பெண் ஒருவர் தனது 10 மாத கை குழந்தையுடன் அங்கே தங்கி, அந்த சிறுவனை கவனித்துக்கொண்டு வந்தார்.

அந்த நேரத்தில், கொரோனா தனிமை மையத்திற்கு தினமும் இரவு நேரத்தில் ஹாட் வாட்டர் தருவதற்காக வரும் 27 வயதான உதவியாளர் ஒருவர், திடீரென அந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டுள்ளார். அப்போது, அந்த பெண் முரண்டு பிடித்து, அவனிடமிருந்து தப்ப முயன்று உள்ளார்.

அந்த நேரம் பார்த்து, அந்த பெண்ணின் கை குழந்தையை தூக்கி வைத்துக்கொண்டு, “நீ வரவில்லை என்றால், உன் குழந்தையை கொன்று விடுவேன்” என்று,  அந்த பெண்ணை மிரட்டியே, தன் இச்சைக்கு இனங்க வைத்துள்ளான்.

அதன்படி, குழந்தையின் உயிரை காப்பாற்றும் நோக்கத்திற்காக, தன் கற்பையே அந்த பெண் அடமானம் வைத்து உள்ளார். அதன்படி, அந்த 27 வயதான ஆண் உதவியாளர், அந்த கை குழந்தையின் முன்னிலையிலேயே அந்த பெண்ணை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்து உள்ளான்.

அதன் தொடர்ச்சியாக, அடுத்த அடுத்த நாட்களில் அங்கு வந்த அந்த 27 வயதான ஆண் உதவியாளர், அந்த பெண்ணை அவருடைய கை குழந்தையை சுட்டிக்காட்டி மிரட்டியே.. மீண்டும் மீண்டும் தொடர்ந்து 3 நாட்களாக பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்து உள்ளான். 

மேலும், “இது குறித்து வெளியே சொன்னால், உன் குழந்தையை கொலை செய்து விடுவேன்” என்றும், அவன் எச்சரித்து அனுப்பியிருக்கிறான்.

இதனையடுத்து, அந்த பெண் வீடு திரும்பிய நிலையில், தன் குழந்தையின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்குமோ என்ற பயத்திலேயே, அந்த பெண் இருந்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று ஓரளவுக்கு குறையத் தொடங்கிய நிலையில், இயல்பு நிலையும் மெல்ல மெல்ல திரும்பி வருகிறது. இதன் காரணமாக, தனக்குத் தானே தைரியத்தை வரவழைத்துக்கொண்ட அந்த பெண், அங்குள்ள காவல் நிலையத்தில், குறிப்பிட்ட அந்த 27 வயதான ஆண் உதவியாளர் மீது பாலியல் பலாத்கார புகார் அளித்து உள்ளார்.

அத்துடன், “சம்மந்தப்பட்ட அந்த நபரால் எனது குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்ற பயத்திலே, இத்தனை நாட்களாக நான் அமைதியாக பயத்தில் இருந்தேன் என்றும், தற்போது தைரியம் வந்துள்ளதால், அந்த பாலியல் வெறியன் மீது புகார் கொடுக்க வந்தேன் என்றும், என்னை போல் அவன் இன்னும் எத்தனை பெண்களை சீரழித்து இருக்கிறானோ? என்ற சந்தேகத்தின் காரணமாகவே, நான் புகார் அளிக்க வந்தேன்” என்றும், அந்த பெண் விளக்கம் அளித்தார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், குற்றஞ்சாட்டப்பட்ட நபரை கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.