இந்தியாவை நினைக்கும் போது நெஞ்சம் பதறுகிறது! - உலக சுகாதார அமைப்பு வேதனை

இந்தியாவை நினைக்கும் போது நெஞ்சம் பதறுகிறது! - உலக சுகாதார அமைப்பு வேதனை - Daily news

கொரோனாவின் இரண்டாவது அலையில் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கும் இந்தியாவின்  நிலை மிகுந்த வேதனை அளிப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 


உலகின் வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. கடந்த சில நாட்களாக, தினசரி கொரோனா பாதிப்பு 3.5 லட்சத்திற்கும் மேல் பதிவாகி வருகிறது.  

மருத்துவ வசதிகள், தடுப்பூசிகள், ஆக்சிஜன் சிலிண்டர் போன்றவற்றிக்கு தட்டுப்பாடுகள் நிலவுகிறது. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கை அமல்படுத்தி வருவதால், மிகக்கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இந்தியாவுக்கு ஆதரவுக்கரம் நீட்ட அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா போன்ற உலக நாடுகளும் முன்வந்துள்ளன.


இந்தநிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரியேசுஸ் கூறியது, ‘’இந்தியாவில் நிலவும் சூழலை பார்க்கும் போது நெஞ்சம் பதறுகிறது. மருத்துவ உபகரணங்கள் மற்றும் வசதிகள் வழங்கி எங்களால் முடிந்த உதவிகளை செய்கிறோம். மேலும்  2,600-க்கும் மேற்பட்ட நிபுணர்களை அனுப்பியுள்ளோம்.” என்று வேதனை தெரிவித்துள்ளார்.

Leave a Comment