உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் தனது மகளைத் தொடர்ச்சியாக 6 மாதங்களாகப் பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை, அவரது மனைவியே காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் காசிப்பூர் அருகில் உள்ள துல்லாப்பூர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் ஒருவர், தன் கணவர் மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், “18 வயதிற்கு குறைவான எனது மகளை, எனது கணவர் கடந்த 6 மாதங்களாகத் தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளதாக” பரபரப்பு புகார் அளித்தார்.

மேலும், “எனது கணவரின் இந்த செயல் குறித்து தொடக்கத்தில் என்னிடம் என் மகள் கூறும் போது, நான் என் கணவரைக் கண்டித்தேன்” என்று குறிப்பிட்டுள்ள அவர், “இது தொடர்பாக நான் காவல் துறையில் புகார் அளிப்பேன்” என்று மிரட்டினேன் எனவும் கூறினார்.

“நான் மிரட்டியதைத் தொடர்ந்து, என் கணவர் 'நான் என்னைத் திருத்திக்கொள்வதாக' தெரிவித்ததாகவும் குறிப்பிட்டு உள்ளார். 

“ஆனால், தற்போது வரை என் கணவர் துளியும் திருந்த வில்லை என்றும், என் மகளுக்கு மீண்டும் மீண்டும் அவர் பாலியல் டார்ச்சர் மற்றும் துன்புறுத்தல்களைச் செய்து வருகிறார்” என்றும், பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்

அத்துடன், “இந்த புகார் குறித்து, எனது கணவரை உடனே கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், அவர் குறிப்பிட்டு இருந்தார். 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தன் சொந்த மகளை பாலியல் வன்புணர்வு செய்த தந்தையை போலீசார் அதிரடியாகக் கைது செய்து, விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், அவர் உண்மையை ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. 

இதனையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்ட வருகின்றனர். 

இதனிடையே, தனது மகளைத் தொடர்ச்சியாக 6 மாதங்களாகப் பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை, அவரது மனைவியே காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம்,  உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

அதே போல், உத்தரப் பிரதேச மாநிலத்தில் 3 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சித்த 75 வயது முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 75 வயது முதியவர் ஒருவர், அந்த பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை விரட்டி அடித்து உள்ளனர். இது தொடர்பாக, சிறுமியின் தந்தை அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் முதியவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. 

இந்த வழக்கில், முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததோடு, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.