உணவு டெலிவரி செய்ய சென்ற இளைஞனால், பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் சக மருத்துவர்களிடையே கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசா மாநிலத்தில் தான் இப்படி ஒரு கொடூரமான சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மருத்துவர்களின் தியாகத்தைப் போற்றும் விதமாக ஜூலை 1 ஆம் தேதியான இன்று தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்தியா உட்பட உலகம் முழுவதும் தற்போது நிலவி வரும் இந்த கொரோனா காலத்தில், மருத்துவர்களின் பங்கு எப்படிப்பட்டது என்பது யாருக்கும் விவரித்துச் 

சொல்லித் தெரியவேண்டியதில்லை. அப்படிப்பட்ட இந்த உன்னதமான தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படும் இந்த தினத்தில் தான், பெண் மருத்துவர் 

ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளது ஒட்டுமொத்த மருத்துவர்களிடையே கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, ஒடிசா மாநிலம் அங்குல் மாவட்டத்தில் உள்ள செண்டிபதா பகுதியில் செயல்பட்டு வரும் தாபா உணவகத்திற்கு, பெண் ஒருவர் சென்று இரவு உணவு 

சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது, மருத்துவரான தனது சகோதரிக்கு உணவு பார்சல் வாங்கி, அதனை அவர்களின் வீட்டுக்கு டெலிவரி செய்யுமாறு தாபா உணவகத்தின் உரிமையாளரிடம் கேட்டுக்கொண்டார்.

அதன் படி, அந்த தாபா உணவக உரிமையாளரின் மகன் 35 வயதான சுகந்தா பெகெரா, அதே பகுதியில் உள்ள மருத்துவர்களுக்கான குடியிருப்புக்கு இரவு 11 மணி அளவில் அந்த உணவை டெலிவரி செய்வதற்காகச் சென்று இருக்கிறார். 

அப்போது, அந்த வீட்டில் 32 வயதான பெண் மருத்துவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்து உள்ளார். அத்துடன், வீட்டில் யாரும் இல்லாததைத் தெரிந்துகொண்ட சுகந்தா பெகெரா, அந்த பெண் மருத்துவரை, பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். 

மேலும், “இந்த சம்பவம் பற்றி வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது” என்றும், அவர் மிரட்டி உள்ளார். 

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த அந்த பெண் மருத்துவர், மறுநாள் காலை விடிந்ததும், அங்குள்ள காவல் நிலையத்துக்குச் சென்று இந்த பாலியல் பலாத்காரம் சம்பவம் குறித்து புகார் அளித்து உள்ளனர். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பெண் மருத்துவரை பலாத்காரம் செய்த சுகந்தா பெகெராவை அதிரடியாகக் கைது செய்து, விசாரணை மேற்கொண்ட நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.