பள்ளி மாணவனுக்கு காதல் வலை வீசிய கல்லூரி மாணவி, சிறுவனை கல்யாணம் செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடகா மாநிலத்தில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கர்நாடகா மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த 20 வயதான இளம் பெண் ஒருவர், அங்குள்ள கல்லூரியில் பி.எஸ்.சி நர்சிங் படித்து வந்தார். 

இந்த நர்சிங் மாணவி, அதிக நேரம் சமூக வலைதளமான ஃபேஸ் புக் பக்கத்தில் எந்நேரமும் மூழ்கி கிடந்து உள்ளார். அதன் படி, அந்த மாணவி, ஃபேஸ் புக் மூலமாக பலருடனும் நட்பாக பழகி வந்தார் என்று, கூறப்படுகிறது. 

அந்த நேரத்தில், அங்குள்ள சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவன் ஒருவனுக்கு, அந்த கல்லூரி மாணவி நட்புக்கான அழைப்பு விடுத்து உள்ளார். இந்த கல்லூரி மாணவியின் நட்புக்கான அழைப்பை, அந்த பள்ளி மாணவனும் ஏற்றுக்கொண்டார்.

பள்ளி சிறுவனை ஃபேஸ்புக் மூலம் சந்தித்த அந்த மாணவி, அந்த சிறுவனுடன் அடிக்கடி சாட்டிங்கில் ஈடுபட்டு வந்தார். இருவருக்கும் இடையோன தொடர் சாட்டிங் காரணமாக, அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதல் வயப்பட்டதாக தெரிகிறது. இதனால், அவர்கள் இருவரும் ஃபேஸ்புக்கிலேயே தங்களது காதலை அவர்கள் வளர்த்துக்கொண்டு வந்தனர்.

இப்படியான தருணத்தில், அந்த நர்சிங் மாணவி “நாம் உடனடியாக திருமணம் செய்து கொள்ளலாமா?” என்று, அந்த சிறுவனிடம் தன்னுடைய விருப்பத்தை கூறியிருக்கிறார். இதனைக் கேட்டு சற்று அதிர்ச்சியடைந்த அந்த பள்ளி மாணவன், பிறகு காதல் ஆசையில் சந்தோஷமடைந்து, கல்லூரி மாணவியை கல்யாணம் செய்துகொள்ள சிறுவன் சம்மதம் தெரித்து உள்ளார்.

சிறுவனின் “சம்மதம்” என்ற வார்த்தையை கேட்டு இன்னும் சந்தோஷம் அடைந்த அந்த பெண், இந்த விசயத்தை தனது வீட்டில் கூறியதாக தெரிகிறது. ஆனால், இதற்கு அவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். எனினும், பெற்றோரின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, சிறுவனை அங்குள்ள ஒரு கோயிலுக்கு வரச்சொல்லி, அந்த கல்லூரி மாணவி முழு திருமண ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார். 

அதன் படி, காதலர்கள் இருவரும், கடந்த வாரம் ஜூன் 16 ஆம் தேதி அன்று, அங்குள்ள ஒரு கோயிலில் மாலை மாற்றிக்கொண்டு, திருமணம் செய்து கொண்டு உள்ளனர். 

“பள்ளி மாணவனை, கல்லூரி மாணவி ஒருவர், பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்துகொள்கிறார்” என்கிற இந்த தகவல், அந்த ஊர் மக்களிடையே தீயாக பரவியது. 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த ஊர் மக்கள் சிலர், இந்த திருமணம் பற்றி அங்குள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அத்துடன், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளுக்கும் இந்த திருமணம் பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டபது.

அதன் படி, குழந்தைகள் நல அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து, இது தொடர்பாக விசாரணை நடத்த அந்த கிராமத்திற்கு வருகை தந்தனர். 

தொடர்ந்து, “குழந்தை திருமண பிரிவில் அந்த ஜோடி மீது வழக்கு பதிவு செய்து” இருவரையும் அழைத்துச் சென்று போலீசார் மற்றும் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.