விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான தொடர்களில் ஒன்று ராஜா ராணி.இந்த தொடரின் மூலம் பிரபலமானவர் மிகவும் பிரபலமானவர் ஹீரோயினாக நடித்த ஆல்யா மானசா.குறுகிய காலத்தில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் இதயங்களில் இடம்பிடித்துவிட்டார்.இந்த தொடரில் ஹீரோவாக நடிக்கும் சஞ்சீவுக்கும் மானசாவுக்கும் காதல் மலர்ந்தது.

இதனை அடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.ஆல்யா மானசா சஞ்சீவ் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.இந்த குழந்தைக்கு ஐலா சையத் பெயரிட்டிருந்தனர்.ராஜா ராணி தொடரை அடுத்து கல்யாணம்,குழந்தை என்று பிஸியாக இருந்தார் ஆல்யா.ஒரு சிறிய இடைவேளைக்கு பின் ராஜா ராணி 2 தொடரின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார் ஆல்யா.

இந்த தொடரில் திருமணம் சீரியல் புகழ் சித்து ஹீரோவாக நடித்துள்ளார்.பிரவீனா,அர்ச்சனா VJ உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த தொடர் தற்போது ஒளிபரப்பாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.இந்த தொடரின் ஷூட்டிங்கில் இருந்து சில வீடியோக்களை ஆலியா பகிர்ந்து வருவார் ஆல்யா மானசா.

தற்போது இந்த தொடரில் நடிக்கும் நடிகைகளுடன் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா இருக்கும் சில புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.இவர் இந்த தொடரில் சிறப்பு தோற்றத்தில் வருகிறாரா அல்லது சீரியல் ஷூட்டிங்கிற்கு அருகே இவரது படத்தின் ஷூட்டிங் நடந்ததால் விசிட் அடித்தாரா என்பது தெரியவில்லை,இதனை நாம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

sj suryah trending photo from raja rani 2 archana vj alya manasa sidhu

sj suryah trending photo from raja rani 2 archana vj alya manasa sidhu