இந்திய தலைநகர் புது டெல்லியில், இன்று (நவம்பர் 20) காலை மைனஸ் 7.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர் பதிவாகியுள்ளது. இது கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத நவம்பர் மாத குளிர் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் குளிர்நிலையானது மைனஸ் 10 டிகிரிக்கும் கீழ் குறைந்து, இரண்டு நாள்களுக்கு அதே நிலை நீடித்தால்தான் கடுங்குளிர் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பது வழக்கம். இந்த நிலையில், கடந்த 14 ஆண்டுகளில் இதுவரை இல்லாத வகையில், நவம்பர் மாதத்தில் இன்று பதிவான மைனஸ் 7.4 டிகிரி செல்சியஸ் வெப்ப அளவே மிகக் குறைவானதாக உள்ளது.

டெல்லியில் கடந்த ஆண்டு நவம்பரில் 11.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது. 2018ல் 10.5 டிகிரி செல்சியஸும், 2017ல் 7.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்ததுமே, அந்த ஆண்டுகளில் நவம்பர் மாதங்களில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலையாகும்.

வானிலையின் இந்த மாற்றத்துக்கு, டெல்லியின் மோசமான காற்றும் ஒரு காரணமாக இருக்கலாம் என எதிர்ப்பாக்கப்படுகிறது. டெல்லியில் கடந்த சில ஆண்டுகளாகவே காற்று மாசு மிகவும் அதிகரித்து வருவதால் அம்மாநில மக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். குறிப்பாக சமீபத்தில் கொண்டாடப்பட்ட தீபாவளிக்குப் பின்னர் டெல்லியில் காற்றின் மாசு பல மடங்கு அதிகரித்தது. 

எந்தவொரு நகரின் காற்றின் மாசின் தரநிலை 60க்கு மேல் இருந்தாலும், அங்கு வாழும் மனிதர்கள் மட்டுமன்றி விலங்குகளின் உடல் நலத்திற்கும் கேடு விளைவிக்கும் என்பது காற்று மாசுபாட்டு துறையின் அறிவுரை. இந்த தரநிலை கணக்கு டெல்லியில் பரிசோதிக்கப்பட்ட போது, அங்கு 251 முதல் 351 வரை காற்று மாசு உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் வெளிவந்தது. இது, அந்நகரில் உள்ள மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து கடுமையாக இருப்பதால் அம்மாநில மக்கள் பலர் டெல்லியை விட்டு வேறு மாநிலங்களில் உள்ள தங்கள் உறவினர்கள் வீடுகளுக்கு தற்காலிகமாக இடம் மாற்றம் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

டெல்லியில் ஏற்பட்டுள்ள கடுமையான காற்று மாசுவை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் மாசுக்கட்டுப்பாடு துறை கடும் அதிர்ச்சியில் உள்ளது.

இந்தக் காற்று மாசு யாவும், டெல்லியில் கொரோனா பரவலை தீவிரமாக்கியுள்ளதாக, சில தினங்களுக்கு முன் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார். அது உண்மையெனும் விதமாக, நாளுக்கு நாள் டெல்லியில் கொரோனா பிரச்னை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று (நவம்பர் 20) டெல்லியில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசுடன்  வணிகர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக பேசிய முதல்வர் அரவிந்த் கேஜரிவால், ''சந்தைப் பகுதிகளில் கொரோனாவைக்  கட்டுப்படுத்துவதில் வணிகர் சங்கங்களின் ஒத்துழைப்பை உறுதி செய்யும் வகையில் வணிகர் சங்க பிரதிநிதிகளை இன்று சந்தித்தேன். சந்தைகளில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் வணிகர்களுக்கு மிக முக்கிய பங்குள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வந்தாலும், எந்த சந்தைகளையும் முடக்குவதற்கு அரசு விரும்பவில்லை. சந்தைகளுக்கு முகக்கவசம் அணியாமல் வரும் மக்களுக்கு வணிகர் சங்கம் சார்பில் இலவச முகக்கவசம் வழங்கப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அனைத்துக் கடைகளிலும் கூடுதலாக முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது'' என்று கூறினார்.