தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், ஒரு பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த  வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க உள்ளது.

 
பெண் ஜபிஎஸ் அதிகாரிக்கு, சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த பெண் ஜபிஎஸ் அதிகாரி கொடுத்த புகார் தொடர்பாக விசாரிக்க கூடுதல் தலைமைச் செயலர் ஜெயஸ்ரீரகுநந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது.


 பெண்ணை மானபங்கப்படுத்துதல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இது குறித்து புகார் அளிக்க வந்த பெண் எஸ்.பி-யை தடுத்து மிரட்டிய செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 


இந்நிலையில் ராஜேஷ் தாஸ் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க உள்ளது. இந்த வழக்கினை இன்று உயர்நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.