இந்தியாவில் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 20 லட்சத்தினை கடந்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி 20,06,760 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச அளவில் இந்தியா கொரோனா தொற்று பாதிப்பில் தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது. பிரேசில் 28 லட்சம் கொரோனா பாதிப்புகளோடு இரண்டாம் இடத்திலும், 50 லட்சம் பாதிப்புகளோடு அமெரிக்கா முதல் இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று நிலவரப்படி, அதற்கு முந்தைய கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 56 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டிருந்ததாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. இதன் காரணமாக நாடு முழுவதும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19.65 லட்சமாக அதிகரித்திருந்தது.

அப்படியான சூழலில், இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாக 62,538 பேர் பாதிப்படைந்துள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை அடைந்த 21 நாட்களில் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே 886 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 41,585 ஆக உயர்ந்துள்ளது. 

இதுவரை நோய் தொற்றால் பாதிப்படைந்த 13.78 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைபவர்களின் விகிதமானது 67.98 ஆக உள்ளது. 

இதுவரை 13.28 லட்சம் கொரோனா நோயாளிகள் இந்நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். அதே போல 40,000க்கும் அதிகமானோர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த ஜனவரி முதல் பரவத் தொடங்கிய கொரோனா பாதிப்பானது, ஒவ்வொரு மாதமும் தீவிரமடைந்துக் கொண்டே சென்றது. அந்தவகையில், கடந்த ஜூலை 18 ஆம் தேதி அன்று மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியது. ஒரு மில்லியன் (10 லட்சம்) என்ற எண்ணிக்கையை எட்டுவதற்கு, முழு வீச்சில் 4 மாதங்கள் இடைவெளி இருந்தது. 

ஆனால் அந்த ஒரு மில்லியன், இரட்டிப்பாக, வெறும் மூன்று இடைவெளியே போதுமானதாகிவிட்டது. 
அதாவது சுமார் 3 வாரங்களில் மேலும் 10 லட்சம் பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

நாடு முழு­வ­தும் இரண்­டா­வது முறை­யாக நேற்று முன்­தி­னம் 6.19 லட்­சம் மாதி­ரி­கள் பரி­சோ­திக்­கப்­பட்­டுள்­ளன. இந்த எண்­ணிக்கை விரை­வில் அதி­க­ரிக்­கப்­பட உள்­ளது.

அனைத்து மாநி­லங்­க­ளை­யும் சேர்த்து 1,366 பரி­சோ­த­னைக்­கூடங்­கள் இயங்கி வரு­கின்­றன.

கிரு­மித்­தொற்­றால் உயி­ரி­ழந்த­வர்­களில் 68 விழுக்­காட்­டி­னர் ஆண்­கள் என்­றும் 32 விழுக்­காட்­டி­னர் பெண்­கள் என்­றும் மத்­திய சுகா­தார அமைச்­ச­கத்­தின் செய­லர் ராஜேஷ் பூஷண் தெரி­வித்­துள்­ளார்.

இறந்­த­வர்­களில் பாதிக்­கும் மேற்­பட்­டோர் 60 அல்­லது அதற்­கும் மேற்­பட்ட வய­தி­னர் என்­றும் 45 முதல் 60 வய­துக்­குட்­பட்­ட­வர்­கள் 37 விழுக்­காட்­டி­னர் என்­றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

உலகிலேயே 2வது அதிக மக்கள் தொகை உள்ள நாடான இந்தியாவில் இந்த பாதிப்பை ஒப்பிடும் மிக குறைவான சதவீதம் தான் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். "இது 130 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட இந்தியா போன்ற நாட்டில் கொரோனா பாதிப்பு ஒரு சதவிகிதம் கூட இல்லை" என்று சஃப்தர்ஜங் மருத்துவமனையின் சமூக மருத்துவத் துறையின் பேராசிரியரும் தலைவருமான டாக்டர் ஜுகல் கிஷோர் கூறியிருக்கிறார்

மேலும் "நாம் அதிக சோதனை செய்தால் அதிக பாதிப்பு எண்ணிக்கை சேர்க்கப்படுகிறது. இறப்பு தவிர்க்கப்பட வேண்டியது தான் முக்கியமானது. அதற்கு தொற்று பாதிப்பை முன்கூட்டியே கண்டறிய வேண்டும். திறமையான நிர்வாகத்தால் அந்த வேலையைச் செய்ய முடியும்" என்றும் ஜுகல் கிஷோர் கூறியுள்ளார்.

முன்னதாக உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞாணியான சௌமியா சுவாமிநாதன், இந்தியாவின் மக்கள் தொகையோடு ஒப்பிடுகையில், மிகக்குறைவாகவே பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து வருங்காலத்தில், பரிசோதனைகள் இன்னும் கூட அதிகரிக்கப்படலாம் என்ற சொல்லப்பட்டுவருகிறது. அதன் விளைவாக, நோயாளிகள் எண்ணிக்கை உயர்வு, மிக வேகமாக உயரும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.