இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மருத்துவ வசதிகளும், ஆக்சிஜன் சிலிண்டர்களுகும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆக்சிஜன் தட்டுப்பாட்டை குறைக்க உள்நாட்டில் உற்பத்தி  அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.

மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, உத்திர பிரதேசம், தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில்  கொரோனா தொற்று அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளது. 

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை, 14 கோடியே 52 லட்சமாக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை, 28.82 லட்சத்தை தாண்டியுள்ளது.

கடந்த சில நாட்களாக  மூன்றரை லட்சத்திற்கும் அதிகமான பாதிப்புகள் பதிவானதையடுத்து, கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு, 3.23 லட்சமாக குறைந்துள்ளது.