தென்னிந்தியாவில் அதிகம் கவனம் பெற்ற நடிகைகளில் ஒருவர் சமந்தா. தொடர்ந்து பெண் சார்ந்த கதை களத்துடன் தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார். இரண்டு மொழி படங்களிலும் நல்ல வரவேற்பை பெற்று வரும் இவர் கடந்த 2019 ல் இந்தி தொடராக வெளிவந்த ‘தி பேமிலி மேன்’ திரைப்படத்தில் தன் நடிப்பின் மூலம் வட இந்தியாவிலும் வரவேற்பை பெற்றார் சமந்தா. பின் புஷ்பா பாடல் மூலம் பரவலாக அனைவருக்கும் தெரிந்து ஜனரஞ்சகமாக ஏற்கபட்டார் . கடந்த ஆண்டு வெளிவந்த யசோதா திரைப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நல்ல வரவேற்பை பெற்றார். இதனிடையே உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

யசோதா படத்திற்கு பிறகு சமந்தாவின் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் 'சாகுந்தலம்'. மகாகவி காளிதாசர் எழுதிய புராண கதையான 'சாகுந்தலம்' கதையை அடிப்படையாக கொண்டு சரித்திர கதையாக படமாக்கபட்டுள்ள இந்த படத்தை ருத்ரமாதேவி திரைப்படத்தின் இயக்குனர் குணசேகர் எழுதி இயக்கியுள்ளார். மேலும் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் வெளியிடும் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் மணிஷர்மா இசையமைத்துள்ளார்.

முன்னதாக நவம்பரில் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்திருந்த படக்குழு முழுக்க முழுக்க 3D தொழில்நுட்பத்தில் படத்தை மாற்ற இருந்ததால் திரைப்படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்தது. இந்நிலையில் திட்டமிட்டபடி 3D தொழில்நுட்ப பணிகள் நிறைவடைந்துள்ளதால் படத்தின் வெளியீட்டு தேதி வரும் பிப்ரவரி 17 ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கின்றன.

மேலும் படத்தில் தேவ் மோகன், மோகன் பாபு, கௌதமி, அதிதி பாலன், பிரகாஷ் ராஜ், மதுபாலா ஆகியோர் நடித்துள்ளனர். சாகுந்தலா வின் மகனாக நடிகர் அல்லு அர்ஜுன் மகள் அல்லு அர்ஹா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.