தென்னிந்தியாவின் முன்னணி நடிகரும் குடும்பங்கள் கொண்டாடும் பல பிளாக் பஸ்டர் படங்களை இயக்கிய இயக்குனருமாகவும் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ்.வறுமையில் இருந்து மீண்டு தன் திறமையினால் திரைத்துறையில் சாதித்து காட்டிய இவர் நடன இயக்குனராகவும் நடிகராகவும் இயக்குனராகவும் திரைத்துறையில் நாளுக்கு நாள் தன்னை புதுப்பித்துக் கொண்டு தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்திருப்பவர். தற்போது இவர் நடிப்பில் கதிரேசன் தயாரித்து இயக்கிய ருத்ரன் திரைப்படம் உலகமெங்கிலும் கடந்த ஏப்ரல் 14 ம் தேதி வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்று திரையரங்குகளில் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்கள் நமது கலாட்டா தமிழ் மீடியா சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் தான் வறுமை காலத்தில் பயணித்த தருணம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை,

எனக்கு ப்ரைன் டியூமர் பிரச்சனை இருந்த நேரத்தில் காசு இல்லாம சொந்த வீட்டை விற்று விட்டோம். 30ஆயிரம் வீடு விற்று அங்கிருந்து கிளம்புகிறோம். அந்த நேரம் ரொம்ப கஷ்டம். தேசிய நகர் வீட்டை விட்டு திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் பக்கம் வாடகைக்கு போறோம். அப்போ விட்டு போகும் போது எங்க அம்மாவோட அழுகையும் எங்க மாமாவோட அழுகையும் நான் பார்த்தேன். மாமா ஊர் தலைவர். அதனால் பொழுது விடிஞ்சதும் போனா எல்லோரும் கேட்பாங்க னு அதிகாலை 4 மணிக்கு அந்த ஏரியாவ விட்டு என்ன கூட்டிட்டு போனாங்க.. எங்க அம்மா வீட்டை தொட்டு கும்பிட்டு அழுது அங்கிருந்து போறாங்க.. அந்த தருணம் எனக்கு நினைவிலே இருந்தது.

அந்த வீட்டை வாங்குனது நடிகர் தீனாவோட அம்மா. நான் ஒரு பெரிய நிலைக்கு வந்து தீனா கிட்ட சொல்லியிருந்தேன். அந்த வீடு கொடுக்கறதா இருந்தா நான் வாங்கிக்குறேன். தீனா அத கொடுத்தார். 30 ஆயிரமுக்கு கொடுத்த வீட்டை 30 லட்சம் கொடுத்து அம்மாவுக்கு மறுபடியும் வாங்கி கொடுத்தேன்" என்றார்.

மேலும் இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் அவர்கள் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு சுவாரஸ்யமான பல தகவல்களை பகிர்ந்து கொண்ட முழு வீடியோ இதோ...