மீண்டும் படமாகும் விஜய் சேதுபதி விலகிய முத்தையா முரளிதரனின் வாழ்கை வரலாறு – மிரட்டலான First Look இதோ..

முத்தையா முரளிதரன் பட முதல் பார்வை வெளியானது - Muttiah muralidharan 800 movie motion poster released | Galatta

கிரிக்கெட் உலகின் லட்சக் கணக்கான ரசிகர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் அட்டகாசமான சுழற்பந்து வீச்சாளராகவும் இருந்தவர் இலங்கை தமிழ் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன். மிரட்டலான விளையாட்டின் மூலம் பல போட்டியாளர்களை கதிகலங்க வைத்து இலங்கை கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத அரணாக இருந்தவர் முத்தையா. அவரது ஒப்பற்ற விளையாட்டு திறமையை பாராட்டாத உலக மக்கள் கிடையாது. அந்த அளவு அவரது புகழ் பெருமபாலான போட்டிகளில் நிலைத்து நிற்கும். 500 டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக கிரிக்கெட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியவர் இவர் என்ற பெருமைக்குரியவர்.

இவரது வாழ்கை வரலாற்றினை திரைப்படமாக எடுக்கவுள்ளதாகவும் அதில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி முத்தையாவாக நடிக்கவுள்ளதாகவும்படத்திற்கு 800 என்ற தலைப்பில்  முதல் பார்வை வெளியானது. சில காரணங்களினால் விஜய் செதுபதி முரளிதரனாக நடிப்பதில் ரசிகர்கள் மத்தியிலும் அரசியல் கட்சியினர் மற்றும் திரையுலகினர் தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. இதனால் விஜய் சேதுபதி இப்படத்தில் இருந்து விலகுவதாக அதிகாரப் பூர்வமாக அறிவித்திருந்தார்.  

இந்நிலையில் அதே 800 தலைப்பில் திட்டமிட்ட திரைப்படம் வேறு நடிகரை வைத்து திரைப்படம் உருவாகி வருகின்றது. மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் மற்றும்  விவேக் ரங்காச்சாரி இணைந்து தயாரிக்கும் இப்படத்தினை எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்குகிறார். பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் படத்திற்கு இசையமைக்கிறார். இப்படம் இலங்கை, சென்னை, கொச்சி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டு தற்போது படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் 800 படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதில் முத்தையா முரளிதரனாக மதுர் மிட்டல் நடிக்கவுள்ளார். இவர் முன்னதாக ஸ்லம்டாக் மில்லினர் என்ற படத்தில் நடித்துள்ளார்.  படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பு பிரவின் கே எல் செய்கிறார். மேலும் படத்தினை சினேகன் கருனாலதிகா என்பவர் இணைந்து எழுதுகிறார். அட்டகாசமாக வெளியாகியுள்ள புது போஸ்டர் ரசிகர்கள் உட்பட பல கிரிக்கெட் பிரபலங்கள் என பலர் பகிர்ந்து வருகின்றனர். விரைவில் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

The untold story of #MuthiahMuralidaran 🏏🔥

➡️ https://t.co/bqjCWvJGms#MadhurrMittal #MSSripathy @GhibranOfficial @Mahima_Nambiar @RDRajasekar @Cinemainmygenes @MovieTrainMP @VivekRangachari #800TheMovie #800MotionPoster pic.twitter.com/OaLYUz2yLN

— Sony Music South (@SonyMusicSouth) April 17, 2023

“இனிமே ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’  பட்டம் வேண்டாம்” ரசிகர்கள் முன்னிலையில் ராகவா லாரன்ஸ் பகிர்ந்து கொண்ட தகவல் - Exclusive interview இதோ..
சினிமா

“இனிமே ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ பட்டம் வேண்டாம்” ரசிகர்கள் முன்னிலையில் ராகவா லாரன்ஸ் பகிர்ந்து கொண்ட தகவல் - Exclusive interview இதோ..

சந்திரமுகி 2 ம் பாகம் வெளியாவதற்கு முன்பே மூன்றாம் பாகம்?.. - அட்டகாசமான அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்.. Exclusive interview இதோ..
சினிமா

சந்திரமுகி 2 ம் பாகம் வெளியாவதற்கு முன்பே மூன்றாம் பாகம்?.. - அட்டகாசமான அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்.. Exclusive interview இதோ..

10 மொழிகளில் வெளியாகவிருக்கும் ‘சூர்யா 42’ படத்தின் ஆடியோ ரைட்ஸை தட்டி தூக்கிய பிரபல நிறுவனம் – படக்குழு வெளியிட்ட அட்டகாசமான Glimpse இதோ..
சினிமா

10 மொழிகளில் வெளியாகவிருக்கும் ‘சூர்யா 42’ படத்தின் ஆடியோ ரைட்ஸை தட்டி தூக்கிய பிரபல நிறுவனம் – படக்குழு வெளியிட்ட அட்டகாசமான Glimpse இதோ..