தமிழ் சினிமாவில் காதல் நாயகனாகவும் நடிப்பில் நவரச நாயனாகவும் இருந்தவர் கார்த்திக். அவரது மகன் கெளதம் தமிழ் சினிமாவில் இந்திய சினிமாவின் மிகப்பெரிய ஆளுமை மணிரத்னம் அவர்களின் கடல் படம் மூலம் அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரிய படமாக அமைந்தது. இதனாலே இப்படத்திற்கு தனி எதிர்பார்ப்பு எழுந்தது. கடல் திரைப்படம் வெளியாகி சரிவர ஒடமால் போனாலும் படத்தில் நடித்த கெளதம் கார்த்திக் அனைத்து தரப்பு மக்களிடம் பாராட்டுகளை பெற்றார். அந்தளவு அவரது நடிப்பும் பங்களிப்பும் இருந்தது. அதனாலே அவருக்கு வாய்புகள் தமிழ் சினிமாவில் குவிந்தது. அதன்படி ‘வை ராஜா வை’, ‘ரங்கூன்’, ‘ஹரஹா மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘தேவராட்டம்’ போன்ற படங்கள் மக்களிடம் வரவேற்பை பெற்றது. அதன்படி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் கதாநாயகனாக வலம் வந்தார். இருந்தும் அவரது சில படங்கள் மோசமான விமர்சனத்தையே மக்களிடம் பெற்றது. அதன்படி இடையில் சில காலம் கௌதம் கார்த்திக் திரைப்படங்களில் நடித்த வேகம் குறைந்தது.

தற்போது தமிழ் சினிமா மிகவும் எதிர்பார்த்து கொண்டு இருக்கும் சிலம்பரசன் நடித்த பத்து தல படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கௌதம் கார்த்திக் நடித்துள்ளார். இப்படத்தின் முன்னோட்டம் பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் மார்ச் 30 ம் தேதி பத்து தல திரைப்படம் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. மேலும் அதனை தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் நடித்து பிரம்மாண்டமாக பீரியட் திரைப்படமாக உருவான 1947 திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 7ம் தேதி வெளியாகவுள்ளது.

அடுத்தடுத்த கௌதம் கார்த்திக் திரைப்படங்கள் வெளியாகவிருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் நமது கலாட்டா பிளஸ் பிரத்யேக பேட்டியில் நடிகர் கௌதம் கார்த்திக் கலந்து கொண்டு அவரது திரைப்பயணம் குறித்த பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார். இதில் பத்து தல, 1947 போன்ற தனித்துவமான கதைகளில் நடித்துள்ளீர்கள் இதுதான் புதிய கெளதம் கார்த்திக்? இனி இது போன்ற படங்கள் தான் எதிர்பார்க்கலாமா? எப்படி இந்த கதைகளை தேர்ந்தெடுத்தீர்? என்ற கேள்விக்கு அவர்,

இந்த படங்களெல்லாம் நான் கொரோனா காலத்தில் ஒப்பந்தமானேன். கொரோனா காலத்தில் நான் எனது தவறுகளை கண்டறிந்து அதை சரி செய்ய முயற்சிகளில் இருந்தேன். இந்த படங்களில் நான் வந்த பிறகு எனது வேலை செயல்பாட்டினை முழுவதுமாக மாற்றியுள்ளேன். முன்னாடியெல்லாம் இயக்குனர் சொல்றத அப்படியே பண்ணிடுவேன். இந்த கதாபாத்திரத்திற்கு அவ்ளோதான் முடியும் னு நினைத்தேன். நான் அந்த கதைக்காக நேரம் ஒதுக்கவே இல்லை அப்போதெல்லாம். கடல், ரங்கூன் படங்களில் கொடுத்த ஈடுபாடு நான் எந்த படத்திலும் கொடுக்கவில்லை. எனக்கு அந்த நேரத்தில் எதும் தெரியவில்லை. ஆனால் இந்த படத்தில் இதுதான் முதல்முறை காட்சிக்கு கதையோடு ஈடுபாடு செலுத்தினேன். ஒரு நோட்புக்கில் ஒவ்வொரு காட்சியையும் எழுதுவேன். வசனங்களை பயிற்சி செய்தேன். 1947 படத்தில் பழைய கால சொல்லாடல்களை நான் அப்பப்போ இயக்குனரிடம் கேட்டு பயிற்சி பெற்றேன். அதேதான் பத்து தல படத்திற்கும் செய்தேன். என்றார் கௌதம் கார்த்திக்

மேலும் நடிகர் கெளதம் கார்த்திக் பகிர்ந்து கொண்ட பல சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..