நீண்ட நாள் கழித்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அனுஷ்கா – வைரலாகும் புது படத்தின் Glimpse இதோ..

அனுஷ்காவின் புதிய படத்தின் பாடல் வெளியானது விவரம் இதோ - Anushka New Movie Lyrical Video Song out now | Galatta

தென்னிந்தியாவின் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவராக விளங்கும் அனுஷ்கா ஷெட்டி தெலுங்கு மொழியில் முதலில் அறிமுகமானர். அட்டகாசமான அருந்ததி திரைபப்டத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் புகழ் பெற்றார் அனுஷ்கா அதன் பின் தொடர்ந்து தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.  

பின் பான் இந்திய திரைப்படமாக உருவான பாகுபலியில் தேவசேனா கதாபாத்திரத்தில் நடித்து இந்திய அளவு மிகப்பெரிய கவனம் பெற்றார் அனுஷ்கா. ஒருபுறம் கமர்ஷியல் ஹீரோக்களின் முக்கிய படங்களில் நடித்தாலும் மறுபுறம் கதாநாயகிகலை மையப் படுத்தி எடுக்கப்பட்ட பேண்டசி திரைப்படங்களில் நடித்து வரவேற்க பட்டார். அதன்படி 'அருந்ததி' படம் வழியில் 'பஞ்சாக்ஷ்ரி', சந்திரமுகியின் தெலுங்கு வெர்ஷனாக 'நாகவல்லி', 'ருத்ரமாதேவி' ஆகிய படங்களில் படங்களில் நடித்து வந்தார்.

சைஸ் சீரோ படத்திற்காக ஏற்றிய எடையை குறைக்க முடியாமல் சிரமப் பட்ட அனுஷ்கா நான்கு ஆண்டு கழித்து மீண்டும் திரைத்துறையில் அடியெடுத்து வைத்துள்ளார்.  UV கிரியேஷன்ஸ் தயாரிப்பில் அனுஷ்கா 48 திரைப்படமாக உருவாகி வரும் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பின் அனுஷ்கா நடிக்கும் படம் என்பதால் இப்படத்திற்கு தனி எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இயக்குனர் மகேஷ் பாபு.P இயக்கும் இப்படத்தில்  ஸ்ரீ சாய் ஸ்ரீனிவாசா ஆத்ரேயா மற்றும் ஜாதி ரத்தினலு ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த  நடிகர் நவீன் பொலிஷெட்டி கதாநாயகனாக நடிக்கிறார். ரசிகர்களின் நீண்ட கால காத்திருப்பிற்கு பபின் வெளியாகும் அனுஷ்காவின் புதிய படம் நிச்சயம் எதிர்பார்த்த வெற்றியை பெரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இந்நிலையில்  மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தில் இடம் பெற்றுள்ள ‘நோ நோ நோ’ பாடலின் லிரிக் வீடியோ படக்குழு வெளியிட்டுள்ளது. இசையமைப்பாளர் ரதன் இசையில் தமிழில் பாடலாசிரியர் விவேக் எழுதிய இப்பாடலை ரஞ்சிதமே பாடலை பாடிய மானசி பாடியுள்ளார். அவருடன் இணைந்து சொல்லிசை கலைஞர் லேடி காஷ் பாடியுள்ளார். தற்போது ரசிகர்களின் மனதை கவர்ந்து வைரலாகி வருகிறது.  

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அமலா ஷாஜி.. உற்சாகத்தில் ரசிகர்கள் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ..
சினிமா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அமலா ஷாஜி.. உற்சாகத்தில் ரசிகர்கள் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ..

காஷ்மீரில் நிலநடுக்கம்.. லியோ படக்குழுவினருக்கு என்ன நடந்தது? – படக்குழுவினர் பகிர்ந்த தகவல் இதோ..
சினிமா

காஷ்மீரில் நிலநடுக்கம்.. லியோ படக்குழுவினருக்கு என்ன நடந்தது? – படக்குழுவினர் பகிர்ந்த தகவல் இதோ..

44 வயதில் தொழிலதிபரை கரம்பிடித்த பிரபல நடிகை -  'அருவி' லாவண்யா திருமணத்திற்கு குவியும் வாழ்த்து.. விவரம் இதோ..
சினிமா

44 வயதில் தொழிலதிபரை கரம்பிடித்த பிரபல நடிகை - 'அருவி' லாவண்யா திருமணத்திற்கு குவியும் வாழ்த்து.. விவரம் இதோ..