உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தளபதி விஜயின் ‘லியோ’ .. உற்சாகத்தில் ரசிகர்கள் – வைரலாகும் தகவல் இதோ..

உலக கோப்பை போட்டிகளில் இடம் பெரும் விஜயின் லியோ பட விளம்பரம் - Leo promotion during 2023 world cup cricket series | Galatta

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் திரைப்படம் ‘லியோ காஷ்மீரில் ஒரு மாத காலமாக படமாக்கப் பட்டு வரும் லியோ திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வருகிறது. மாஸ்டர் திரைப்படத்தின் மெகா ஹிட்டிற்கு பிறகு தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இணையும் இந்த படத்தில் விஜயுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத். அர்ஜுன், இயக்குனர் கௌதம் மேனன், இயக்குனர் மிஷ்கின் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். செவன் ஸ்க்ரீன் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். முன்னதாக படத்தின் டைட்டில்  வெளியீடு வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது லியோ திரைப்படம்.

நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை தூண்டும் அளவு காஷ்மீரில் இருந்து அப்டேட்டுகள் வந்து கொண்டிருந்த இந்த நேரத்தில் படத்தின் இணை தயாரிப்பாளார் ஜெகதீஷ் பழனிசாமி அவர்கள் 2023 கிரிக்கெட் உலக கோப்பையின் போது லியோ படத்திற்கான விளம்பரம் தொடங்கும் என்று சூசகமாக தெரிவித்துள்ளனர்.  2023 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த முறை இந்தியாவில் அக்டோபர் 5 முதல் நடைபெறவுள்ளது. மேலும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தளபதி விஜயின் லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19 அன்று ஆயுத பூஜை வெளியீடாக வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

 

Confirmed 🤝

Thanks @Jagadishbliss bro 😊 pic.twitter.com/dpq7ngytKR

— Ayyappan (@Ayyappan_1504) March 21, 2023

முன்னதாக இந்தியா vs ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போது அப்போது தளபதி விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்தின் டீசர் புரோமோ மற்றும் போஸ்டர் பெரிய திரையில் திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 2023 உலக கோப்பை போட்டி இந்திய முழுவதும் பல நகரங்களில் நடைபெறவுள்ளது மேலும் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படமும் பான் இந்திய அளவு வெளியாகவுள்ளதால் இந்த படத்தின் விளம்பர பணியும் மிகப்பெரிய அளவு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

44 வயதில் தொழிலதிபரை கரம்பிடித்த பிரபல நடிகை -  'அருவி' லாவண்யா திருமணத்திற்கு குவியும் வாழ்த்து.. விவரம் இதோ..
சினிமா

44 வயதில் தொழிலதிபரை கரம்பிடித்த பிரபல நடிகை - 'அருவி' லாவண்யா திருமணத்திற்கு குவியும் வாழ்த்து.. விவரம் இதோ..

'சூரரைப் போற்று' இந்தி ரீமேக் ரிலீஸ் எப்போது?.. படக்குழு வெளியிட்ட அட்டகாசமான அப்டேட் – வைரலாகும் பதிவு இதோ.
சினிமா

'சூரரைப் போற்று' இந்தி ரீமேக் ரிலீஸ் எப்போது?.. படக்குழு வெளியிட்ட அட்டகாசமான அப்டேட் – வைரலாகும் பதிவு இதோ.

ஒரே நேரத்துல 3 பேரை Love பண்ணேன்.. உண்மையை உடைத்த நடிகை ஷகீலா -  வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

ஒரே நேரத்துல 3 பேரை Love பண்ணேன்.. உண்மையை உடைத்த நடிகை ஷகீலா - வைரலாகும் வீடியோ இதோ..