“ஏன் இவங்கள சமூகம் ஏத்துக்கனும்” காட்டமாக விமர்சித்த நடிகை ஷகீலா.. – வைரலாகி வரும் முழு வீடியோ இதோ..

திருநங்கைகள் குறித்து சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த நடிகை ஷகீலா - Actress Shakeela about society vs transgender society | Galatta

கவர்ச்சியான நடிப்பினால் பல ஆண்டுகள் ரசிகர்களை கவர்ந்து தன் வசம் வைத்த திரைப்பிரபலம் நடிகை ஷகீலா நூறு நாள் ஓடிய படங்கள் பட்டியலிட்டு கொண்டே போகலாம். மலையாளம் தமிழ் என்று பல படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடிகை ஷகீலா நடித்திருந்தார். திரைத்துறையில் அழுத்தமான கதாபாத்திரம் எதுவும் கிடைக்காமல் ஷகீலா கவர்ச்சி நடிகை என்ற சிக்கலான் கண்ணோட்டத்திலே இருந்து வந்தார். முன்னதாக விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பான மக்களின் கவனம் ஈர்த்த நிகழ்ச்சியான குக்கு வித் கோமாளியில் போட்டியாளராக நடிகை ஷகீலா பங்கெடுத்தார். இதில் ஷகீலா என்றால் கவர்ச்சி நடிகை என்ற எண்ணம் மாறி ‘அம்மா என்று ரசிகர்களால் அதிகம் அழைக்கப் பட்டு வந்தார். தற்போது நடிகை ஷகீலா தனது வாழ்க்கையில் புத்துணர்வான கட்டத்தில் அடியெடுத்து வைத்து பல தருணங்களில் அசத்தி வருகிறார். இவரது பேச்சுகள் ரசிகர்களை கவர்வது மட்டுமல்லாமல் அவர்கள் பகிரும் அளவு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை ஷகீலா நமது கலாட்டா தமிழ் மீடியா ஏற்பாடு செய்த சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு தனது ரசிகர்கள் முன்னிலையில் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இதில் திருநங்கைகள் குறித்த சமூக பார்வை என்னவாக இருக்கின்றது என்ற கேள்விக்கு.

அவர், "திருநங்கைகள் எல்லொரும் என் பொண்ணுங்க தான்..  சமூகத்தை திருத்தனும், அதுக்கு எதாவது சொல்லனும்னா அது என் வேலை இல்லை.. சமூகம் ஏன் இவங்கள ஏத்துக்கனும். அவங்க அவங்களோட வாழ்க்கைய சூப்பரா வாழ்ந்துட்டு இருக்காங்க.. அவங்க கஷ்டபடுறாங்க.. அவங்க துணி போடுறாங்க..

நமக்கு 15,000 ரூ வாடகைனா அவங்களுக்கு 30,000 ரூ வாடகை கேட்குறாங்க..  சமூகத்தில் வாழ்றதுக்கே கஷ்டபடுறாங்கனு தெரிஞ்சும் இப்படி பன்றாங்க.. அதனால இந்த சமூகத்தை எப்பவும் திருத்த முடியாது.  அதை திருத்துவது திருநங்கைகளின் வேலை இல்லை..‌ அவங்க சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்காங்க.. அவங்கள வாழ விட்டா மட்டும் போதும். அப்படி வாழவிட்டா அவங்க உதவி செய்வாங்க அரசாங்கத்திற்கு.." என்றார்.

நடிகை ஷகீலா குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்வதாகவும் திருநங்கையை தத்தெடுத்து தன் மகளாக வளர்த்து வருவதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து நடிகை ஷகீலா அவர்களுக்கு மிகப்பெரிய அளவு மரியாதையையும் வாழ்த்துகளும் குவிந்து வந்தது. ஷகீலாவின் வளர்ப்பு மகள் மிலா ஒரு மாடலாகவும் காஸ்டியூம் டிசைனராகவும் மற்றும் நடிகையாகவும் தற்போது கலக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் திரைப்பிரபலம் ஷகீலா பேசிய சுவாரஸ்யமான தகவல்கள் கொண்ட முழு வீடியோ இதோ..

காஷ்மீரில் நிலநடுக்கம்.. லியோ படக்குழுவினருக்கு என்ன நடந்தது? – படக்குழுவினர் பகிர்ந்த தகவல் இதோ..
சினிமா

காஷ்மீரில் நிலநடுக்கம்.. லியோ படக்குழுவினருக்கு என்ன நடந்தது? – படக்குழுவினர் பகிர்ந்த தகவல் இதோ..

44 வயதில் தொழிலதிபரை கரம்பிடித்த பிரபல நடிகை -  'அருவி' லாவண்யா திருமணத்திற்கு குவியும் வாழ்த்து.. விவரம் இதோ..
சினிமா

44 வயதில் தொழிலதிபரை கரம்பிடித்த பிரபல நடிகை - 'அருவி' லாவண்யா திருமணத்திற்கு குவியும் வாழ்த்து.. விவரம் இதோ..

'சூரரைப் போற்று' இந்தி ரீமேக் ரிலீஸ் எப்போது?.. படக்குழு வெளியிட்ட அட்டகாசமான அப்டேட் – வைரலாகும் பதிவு இதோ.
சினிமா

'சூரரைப் போற்று' இந்தி ரீமேக் ரிலீஸ் எப்போது?.. படக்குழு வெளியிட்ட அட்டகாசமான அப்டேட் – வைரலாகும் பதிவு இதோ.